/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ 'ஏசி, எல்.இ.டி., லைட்' தயாரிப்புக்கு மீண்டும் பி.எல்.ஐ., திட்டம் 'ஏசி, எல்.இ.டி., லைட்' தயாரிப்புக்கு மீண்டும் பி.எல்.ஐ., திட்டம்
'ஏசி, எல்.இ.டி., லைட்' தயாரிப்புக்கு மீண்டும் பி.எல்.ஐ., திட்டம்
'ஏசி, எல்.இ.டி., லைட்' தயாரிப்புக்கு மீண்டும் பி.எல்.ஐ., திட்டம்
'ஏசி, எல்.இ.டி., லைட்' தயாரிப்புக்கு மீண்டும் பி.எல்.ஐ., திட்டம்
ADDED : செப் 14, 2025 11:27 PM

புதுடில்லி:உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் நன்மைகளை பெற, 'ஏசி, எல்.இ.டி., லைட்' தயாரிப்பு நிறுவனங்கள், இன்று முதல் வரும் அக்.,14 வரை விண்ணப்பிக்கலாம் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து உள்ளதாவது:
கடந்த 2021 ஏப்ரலில் முதல்முறையாக வெளியிடப்பட்ட போது கடைப்பிடிக்கப்பட்ட விதிகள், நிபந்தனைகள் மாற்றமின்றி தொடர்கிறது.
விண்ணப்பதாரர்கள் https://pliwg.dpiit.gov.in/ என்ற போர்ட்டல் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். காலக்கெடு முடிந்த பின்னர் அனுப்பும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
ஏற்கனவே திட்டத்தில் இணைந்து பயனடைந்தவர்கள் மற்றும் புதிய நிறுவனங்கள் ஊக்கத்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். முதலீட்டு வகையை பொறுத்து, புதிய நிறுவனங்கள் அதிகபட்சம் 2 ஆண்டுகள் ஊக்கத்தொகை பெற முடியும். ஏற்கனவே, பயனடைந்த விண்ணப்பதாரர்கள் ஓராண்டு மட்டுமே ஊக்கத்தொகை பெற இயலும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே திட்டத்தில் இணைந்து பயனடைந்தவர்கள் மற்றும் புதிய நிறுவனங்கள் ஊக்கத்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்