
எச்.டி.பி., பங்கு விலை ரூ.700 - -740 ஆக நிர்ணயம்
தனிநபர் மற்றும் சிறிய கடன்களை வழங்கி வரும் வங்கி சாராத நிதி நிறுவனமான எச்.டி.பி., பைனான்சியல் சர்வீசஸ், 12,500 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது. இதில், தாய் நிறுவனமான எச்.டி.எப்.சி., வங்கியின் வசமுள்ள பங்குகள் விற்பனை வாயிலாக 10,000 கோடி ரூபாயும்; புதிய பங்குகள் விற்பனை வாயிலாக 2,500 கோடி ரூபாயும் திரட்ட உள்ளது.
சாம்பவ் ஸ்டீல் டியூப் பங்கு விலை நிர்ணயம்
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை தலைமையிடமாக கொண்டு, ஸ்டீல் குழாய் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சாம்பவ் ஸ்டீல் டியூப், 540 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட ஐ.பி.ஓ., வருகிறது. முதலீட்டாளர் வசமுள்ள பங்குகள் விற்பனை வாயிலாக 100 கோடி ரூபாயும்; புதிய பங்குகள் விற்பனை வாயிலாக 440 கோடி ரூபாயும் திரட்ட திட்டமிட்டுள்ளது.
ரூ.2,500 கோடிக்கு கடன் பத்திரம் வெளியிடும் சம்வர்தனா மதர்சன்
உ.பி.,யின் நொய்டாவைச் சேர்ந்த வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பாளரான சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல், பங்குகளாக மாற்ற இயலாத கடன் பத்திரங்கள் வெளியீடு வாயிலாக 2,500 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இவை முதிர்வடையும் காலத்தை பொறுத்து, முதலீட்டாளர்களுக்கு வட்டியுடன் தொகை திருப்பி செலுத்தப்படும்.


