Dinamalar Logo


புதிய பங்கு வெளியீடு

புதிய பங்கு வெளியீடு

புதிய பங்கு வெளியீடு

புதிய பங்கு வெளியீடு

ADDED : பிப் 04, 2024 01:11 AM


Google News
Latest Tamil News

ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி


கடந்த 2006ம் ஆண்டு துவங்கப்பட்ட 'ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி' சிறு, குறு மற்றும் நடுத்தர கடன்கள், வீட்டு கடன்கள், இரு சக்கர வாகன கடன்கள், தங்க கடன்கள் உள்ளிட்டவற்றை வழங்கும் வங்கி அல்லாத நிதி நிறுவனமாகும்.

தனிநபர் கடன்கள், விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடன்கள் மற்றும் குழு கடன்கள் உட்பட பல்வேறு பாதுகாப்பற்ற கடன்களை வழங்குகிறது.

நிதி நிலவரம்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவனத்தின் வருவாய் 2,215 கோடி ரூபாய். வரிக்கு பிந்தைய லாபம் 213 கோடி ரூபாய்.

துவங்கும் நாள் : 07.02.24

முடியும் நாள் : 09.02.24

பட்டியலிடும் நாள் : 14.02.24

பட்டியலிடப்படும் சந்தை : பி.எஸ்.இ., - என்.எஸ்.இ.,

பங்கு விலை : ரூ.393 - 414

பங்கின் முகமதிப்பு : ரூ.10

புதிய பங்கு விற்பனை : ரூ.462 கோடி

பங்குதாரர்கள் பங்கு விற்பனை : ரூ.108 கோடி

மொத்த பங்கு விற்பனை : ரூ.570 கோடி