Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ 'இ.பி.எப்.ஓ., ஓய்வூதியம் பெற புதிய படிவம் தேவையில்லை'; வதந்தி குறித்து மத்திய அரசு விளக்கம்

'இ.பி.எப்.ஓ., ஓய்வூதியம் பெற புதிய படிவம் தேவையில்லை'; வதந்தி குறித்து மத்திய அரசு விளக்கம்

'இ.பி.எப்.ஓ., ஓய்வூதியம் பெற புதிய படிவம் தேவையில்லை'; வதந்தி குறித்து மத்திய அரசு விளக்கம்

'இ.பி.எப்.ஓ., ஓய்வூதியம் பெற புதிய படிவம் தேவையில்லை'; வதந்தி குறித்து மத்திய அரசு விளக்கம்

ADDED : ஜூலை 01, 2025 06:42 AM


Google News
புதுடில்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில், ஓய்வூதியம் பெறுவோர் புதிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வது கட்டாயம் என்று சமூக வலைதளங்களில் பரவும் செய்தி தவறானது; அடிப்படை ஆதாரமற்றது என பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மை சரிபார்ப்பு பிரிவு விளக்கம் அளித்துள்ளது.

வாட்ஸாப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், இ.பி.எப்.ஓ., அமைப்பு, அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும், புதிய ஓய்வூதிய படிவத்தை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும்; அதை சமர்ப்பிக்காவிட்டால், ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்து, படிவத்தை தரவு இறக்கம் செய்வதற்கான இணைப்புடன் கூடிய தகவல் வெளியாகி பரவியது.

இது ஓய்வூதியதாரர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்டுத்திய நிலையில், அரசு விளக்கமளித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us