Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ இந்த வாரம் வரிசை கட்டும் 11 ஐ.பி.ஓ., முதலீட்டாளர்களுக்கு சாதகமா, பாதகமா?

இந்த வாரம் வரிசை கட்டும் 11 ஐ.பி.ஓ., முதலீட்டாளர்களுக்கு சாதகமா, பாதகமா?

இந்த வாரம் வரிசை கட்டும் 11 ஐ.பி.ஓ., முதலீட்டாளர்களுக்கு சாதகமா, பாதகமா?

இந்த வாரம் வரிசை கட்டும் 11 ஐ.பி.ஓ., முதலீட்டாளர்களுக்கு சாதகமா, பாதகமா?

UPDATED : ஜூன் 23, 2025 03:18 PMADDED : ஜூன் 23, 2025 12:30 AM


Google News
Latest Tamil News
மும்பை,:ஐந்து பெரிய நிறுவனங்கள், ஆறு சிறு நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகள், இந்த வாரத்தில் வரிசை கட்டுகின்றன. அவை திரட்டும் தொகை மொத்த தொகை 18,500 கோடி ரூபாய். மொத்தம் 11 ஐ.பி.ஓ.,க்கள் வெளிவரவுள்ளன.

உலக அளவில் இந்திய நிறுவனங்களின் ஐ.பி.ஓ.,க்கள் கடந்த ஆண்டில் பேசுபொருளாகின. மொத்தம் 78 ஐ.பி.ஓ.,க்கள் வெளியாகின.

சிறந்த ஆண்டு


ஹூண்டாய் மோட்டார், ஸ்விகி, என்.டி.பி.சி., கிரீன் எனர்ஜி, பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ், ஓலா எலக்ட்ரிக் உட்பட அவை திரட்டிய மொத்த தொகை 1.40 லட்சம் கோடி ரூபாய். 2023ல் இது 53 நிறுவனங்கள் வாயிலாக 49,436 கோடி ரூபாயாக இருந்தது.

ஐ.பி.ஓ.,க்களுக்கு 2024 சிறந்த ஆண்டாக அமைந்தாலும், இந்த ஆண்டு இதுவரை அப்படி இல்லை.

ஒரே வாரத்தில் 11 நிறுவனங்களின் ஐ.பி.ஓ.,க்கள் வெளியாவதால், மீண்டும் பிரதான சந்தை முதலீடு முதன்மை பெறுகிறதா என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடம் ஏற்பட்டுள்ளது.

உயர்வுக்கு ஆபத்து


அதிக மதிப்பிலான மிட்கேப் பங்குகள், அடுத்தடுத்த புதிய பங்கு வெளியீடுகள் ஆகியவற்றால், இந்திய பங்குச்சந்தை வளர்ச்சி ஆபத்தை எதிர்கொள்ளும் என அமெரிக்காவை சேர்ந்த ஜெப்பரீஸ் சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் கிறிஸ்டோபர் வுட் கணித்துள்ளார்.

'பேராசை மற்றும் பயம்' என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த ஏப்., 7ம் தேதி சரிவில் இருந்து, நிப்டி 50 குறியீடு 14.10 சதவீதம் உயர்வு கண்டு, தற்போது 12 மாத வருமானத்தில் 22.2 மடங்கு அதிகரித்தும், இதே காலத்தில் நிப்டி மிட்கேப் 100 குறியீடு, 23.70 சதவீதம் உயர்வு கண்டு, இதன் மதிப்பு வருமானத்தை விட 27.10 மடங்கு அதிகரித்தும் காணப்படுகிறது.

இதனால், கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை நிறுவனர் மற்றும் பிற முதலீட்டாளர்கள் விற்க வாய்ப்புள்ளது. இந்தளவு பங்குகள் விற்பனை, சந்தை திருத்தத்துக்கு வழிவகுக்கும். மேலும், வரும் வாரத்தில் பல்வேறு நிறுவனங்கள், 15,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீட்டை திரட்ட புதிய பங்கு வெளியீடுக்கு வருகின்றன. புதிய பங்குகள் அதிகரிப்பால், சந்தைக்கு எதிர்மறையாக இருக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நடப்பாண்டில் ஐ.பி.ஓ., மந்தம் ஏன்?


* டிரம்ப் வெளியிட்ட வரி விதிப்புகள்

* ஏற்றுமதி பிரச்னைகளால் தொழில்கள் மந்தநிலை

* ரூபாய் மதிப்பு கடும் சரிவு

* தங்கம் விலை புதிய உச்சம்

* ஆபரேஷன் சிந்துார்

* அதிகரிக்கும் போர்கள்

* முதலீட்டாளர்கள் எச்சரிக்கை உணர்வு

இந்த வார பங்கு வெளியீடுகள்


பெரிய நிறுவனங்கள்

* விஷால் மெகா மார்ட்

* சாய் லைப் சயின்ஸஸ்

* ஒன் மொபிக்விக் சிஸ்டம்ஸ்

* இன்வென்டரஸ் நாலட்ஜ் சொலுஷன்ஸ்

* இன்டர்நேஷனல் ஜெம்மாஜிகல் இன்ஸ்டிடியூட்

சிறு நிறுவனங்கள்

* தனலட்சுமி கிராப் சயின்ஸ்

* டாஸ் தி காய்ன்

* ஜங்கிள் கேம்ப்ஸ்

* சுப்ரீம் பெசிலிடி

* பர்ப்பிள் யுனைடெட் சேல்ஸ்

* யாஷ் ஹை வோல்டேஜ்

என்.எஸ்.இ., - ஐ.பி.ஓ.,வுக்கு எந்த தடையும் இல்லை


ஐ.பி.ஓ.,வுக்கு வருவதில் என்.எஸ்.இ.,க்கு எந்த தடையும் இல்லை. என்.எஸ்.இ., - ஐ.பி.ஓ.,வுக்கு முன்னதாக தீர்வு நிறுவனங்களை பிரிப்பது ஒரு பிரச்னை இல்லை. ஏற்கனவே நிலுவையில் இருந்த அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட்டு விட்டது. ஒருசில சட்டரீதியான தீர்வுகள் மற்றும் வழக்குகள் திரும்ப பெறுவதற்கு மட்டும் தொகை செலுத்த வேண்டி இருக்கிறது என எண்ணுகிறேன்.
- துஹின் காந்த பாண்டே
தலைவர், செபி







      Our Apps Available On




      Dinamalar

      Follow us