/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/தாங்கும் திறனுக்கேற்ற வர்த்தக உத்தியில் கவனம் தேவைதாங்கும் திறனுக்கேற்ற வர்த்தக உத்தியில் கவனம் தேவை
தாங்கும் திறனுக்கேற்ற வர்த்தக உத்தியில் கவனம் தேவை
தாங்கும் திறனுக்கேற்ற வர்த்தக உத்தியில் கவனம் தேவை
தாங்கும் திறனுக்கேற்ற வர்த்தக உத்தியில் கவனம் தேவை

கடந்த வாரம்
எப்.எம்.சி.ஜி., நிறுவனங்கள் கடந்த டிசம்பர் மாதத்தில் நிறைவடைந்த காலாண்டில் ஒற்றை இலக்க அளவிலான விற்பனை அதிகரிப்பை கொண்டிருந்ததாகவும், அதே சமயம் பல பிரிவுகளிலும் லாபத்தின் அளவு சற்று அதிகரித்திருந்தது என்ற செய்தி திங்களன்று வெளியானது
வரும் வாரம்
தொழிற்சாலைகளின் உற்பத்தி, பணவீக்கம், உற்பத்தி ஆலைகளின் உற்பத்தி, பயணியர் வாகன விற்பனை எண்ணிக்கை, ஏற்றுமதி-, இறக்குமதி யின் நிகர அளவு போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த சில தரவுகள் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன
கவனிக்க வேண்டியது
கடந்தவாரம் திங்களன்று வர்த்தக நாளின் இறுதியில் 82 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்த நிப்டி செவ்வாயன்று 157 புள்ளிகள் ஏற்றம், புதனன்று 1 புள்ளி ஏற்றம், வியாழனன்று 212 புள்ளிகள் இறக்கம், வெள்ளியன்று 64 புள்ளிகள் ஏற்றம் என்கிற ரீதியிலான ஏற்ற இறக்கங்களை கண்டிருந்தது
நிப்டியின் டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்த தற்போதைய நிலவரம்
நிப்டி 21,591, 21,399 மற்றும் 21,237 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான ஆதரவையும் (சப்போர்ட்), 22,014, 22,245 மற்றும் 22,407 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான தடைகளையும் (ரெசிஸ்டென்ஸ்) டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது.