/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ சந்தை மதிப்பில் ஹாங்காங்கை பின்னுக்கு தள்ளிய பி.எஸ்.இ., சந்தை மதிப்பில் ஹாங்காங்கை பின்னுக்கு தள்ளிய பி.எஸ்.இ.,
சந்தை மதிப்பில் ஹாங்காங்கை பின்னுக்கு தள்ளிய பி.எஸ்.இ.,
சந்தை மதிப்பில் ஹாங்காங்கை பின்னுக்கு தள்ளிய பி.எஸ்.இ.,
சந்தை மதிப்பில் ஹாங்காங்கை பின்னுக்கு தள்ளிய பி.எஸ்.இ.,
ADDED : ஜூன் 15, 2024 01:02 AM

மும்பை:பி.எஸ்.இ., எனும் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள ஒட்டுமொத்த நிறுவனங்களின் சந்தை மதிப்பு, ஹாங்காங் பங்குச் சந்தையின் சந்தை மதிப்பை மீண்டும் கடந்துள்ளது.
இதையடுத்து, உலகளவில் நான்காவது பெரிய சந்தையாக, மும்பை பங்குச் சந்தை மீண்டும் உருவெடுத்து உள்ளது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாத இறுதியில், ஒரு முறை ஹாங்காங்கை விஞ்சியது.
பார்லி., தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது, சந்தைகள் கடும் சரிவைக் கண்டன. இந்நிலையில், தனிப் பெரும்பான்மை இல்லை என்றாலும், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசே மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்தது.
இதையடுத்து, முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்து, சந்தைகளும் மீளத் துவங்கின. இந்நிலையில், இந்த வாரத் துவக்கத்தில், புதிதாக பொறுப்பேற்ற மத்திய அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டது.
இதில் பெரிதாக எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தவர்களுக்கே, முக்கிய துறைகளை கவனிக்கும் பொறுப்புகள் மீண்டும் வழங்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து கொள்கை ரீதியான முடிவுகளில் பெரிதளவு எந்த மாற்றமும் இருக்காது என்ற நம்பிக்கையில், சந்தையில் முதலீடுகள் அதிகரிக்க துவங்கியுள்ளது.
இதன் காரணமாக, கடந்த சில நாட்களாகவே சந்தை தினந்தோறும் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது.