/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ 'சுஸ்லான் எனர்ஜி' பங்குகள் 5% உயர்வு 'சுஸ்லான் எனர்ஜி' பங்குகள் 5% உயர்வு
'சுஸ்லான் எனர்ஜி' பங்குகள் 5% உயர்வு
'சுஸ்லான் எனர்ஜி' பங்குகள் 5% உயர்வு
'சுஸ்லான் எனர்ஜி' பங்குகள் 5% உயர்வு
ADDED : ஜூன் 20, 2024 10:15 PM

மும்பை:'சுஸ்லான் எனர்ஜி' நிறுவன பங்கு விலை, நேற்று 5 சதவீதம் வரை அதிகரித்தது. இதையடுத்து, அதன் சந்தை மதிப்பு 70,000 கோடி ரூபாயை நெருங்கியுள்ளது.
வரும் 2030ம் ஆண்டுக்குள், 500 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், இப்பிரிவில் இயங்கி வரும் நிறுவனங்களில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, நேற்று தேசிய பங்குச் சந்தையில், வர்த்தகத்தின் இடையே, சுஸ்லான் பங்கு ஒன்றின் விலை, அதிகபட்சமாக 51.34 ரூபாயை எட்டியது. எனினும், வர்த்தக நேர முடிவில் 50.50 ரூபாயாக குறைந்தது.
கடந்த ஓர் ஆண்டில் மட்டும், சுஸ்லான் பங்கு விலை, கிட்டத்தட்ட 285 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மே மாத நிலவரப்படி, மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் இந்நிறுவனத்தில் 2,172 கோடி ரூபாய் முதலீடு செய்துஉள்ளன.