/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ 'ஓலா எலக்ட்ரிக்' ஐ.பி.ஓ.,வுக்கு செபி அனுமதி 'ஓலா எலக்ட்ரிக்' ஐ.பி.ஓ.,வுக்கு செபி அனுமதி
'ஓலா எலக்ட்ரிக்' ஐ.பி.ஓ.,வுக்கு செபி அனுமதி
'ஓலா எலக்ட்ரிக்' ஐ.பி.ஓ.,வுக்கு செபி அனுமதி
'ஓலா எலக்ட்ரிக்' ஐ.பி.ஓ.,வுக்கு செபி அனுமதி
ADDED : ஜூன் 12, 2024 12:06 AM

மும்பை:'ஓலா எலக்ட்ரிக்' நிறுவனம், புதிய பங்கு வெளியீடு வாயிலாக, 5,500 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்கு, செபி அனுமதி வழங்கி உள்ளது.
புதிய பங்கு வெளியீடு வாயிலாக 5,500 கோடி ரூபாய் நிதி திரட்ட, ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. இதற்கான வரைவுகளை, பங்கு சந்தையை கட்டுப்படுத்தும் அமைப்பான செபியிடம், கடந்த டிசம்பரில் சமர்ப்பித்திருந்தது.
தற்போது, பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு செபி ஒப்புதல் அளித்திருப்பதாக, ஓலா நிறுவனத்தின் நிறுவனர் பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஓலா எலக்ட்ரிக் இந்தியாவில் புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் முதல் மின்சார வாகன ஸ்டார்ட்அப் நிறுவனமாகிறது.