/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ சாட்டிலைட் இணைய சேவை ஏர்டெல் - ஸ்டார்லிங்க் ஒப்பந்தம் சாட்டிலைட் இணைய சேவை ஏர்டெல் - ஸ்டார்லிங்க் ஒப்பந்தம்
சாட்டிலைட் இணைய சேவை ஏர்டெல் - ஸ்டார்லிங்க் ஒப்பந்தம்
சாட்டிலைட் இணைய சேவை ஏர்டெல் - ஸ்டார்லிங்க் ஒப்பந்தம்
சாட்டிலைட் இணைய சேவை ஏர்டெல் - ஸ்டார்லிங்க் ஒப்பந்தம்
ADDED : மார் 12, 2025 01:35 AM

புதுடில்லி, மார்ச் 12-
இந்தியாவில் செயற்கைக்கோள் வாயிலான இணைய வசதியை வழங்குவதற்காக, ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்கின் 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இது குறித்து, பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், துணைத் தலைவருமான கோபால் விட்டல் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு, 'ஸ்டார்லிங்க்' செயற்கைக்கோள் இணையதள சேவையை வழங்க, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளோம்.
இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, இந்தியாவின் தொலைதுாரப் பகுதிகளுக்கும் உலகத்தரம் வாய்ந்த அதிவேக பிராட்பேண்டை கொண்டு வர முடியும்.
எங்கள் வாடிக்கையாளர் எங்கு வசித்தாலும், வேலை செய்தாலும், அவர்களுக்கு நம்பகமான மற்றும் மலிவு விலையில் பிராட்பேண்ட் சேவை வழங்குவதை இந்த ஒப்பந்தம் உறுதி செய்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏர்டெல் ஏற்கனவே செயற்கைக்கோள் இணையத்திற்காக 'யூடெல்சாட் ஒன்வெப்' உடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
தற்போது ஸ்டார்லிங்க் உடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தை அடுத்து, ஏர்டெல் அதன் கவரேஜை, சிறிய அல்லது இணையம் இல்லாத பகுதிகளுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.