/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ 'யுலிப்' திட்டங்கள் விற்பனை காப்பீடு ஆணையம் கண்டிப்பு 'யுலிப்' திட்டங்கள் விற்பனை காப்பீடு ஆணையம் கண்டிப்பு
'யுலிப்' திட்டங்கள் விற்பனை காப்பீடு ஆணையம் கண்டிப்பு
'யுலிப்' திட்டங்கள் விற்பனை காப்பீடு ஆணையம் கண்டிப்பு
'யுலிப்' திட்டங்கள் விற்பனை காப்பீடு ஆணையம் கண்டிப்பு
ADDED : ஜூன் 21, 2024 11:26 PM

புதுடில்லி:பங்குச் சந்தை முதலீட்டுடன் தொடர்புடைய காப்பீடு திட்டமான 'யுலிப்' திட்டங்களை, பிரத்யேகமான முதலீட்டு திட்டமாக விளம்பரப்படுத்தக் கூடாது என, இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஆணையம் தெரிவித்துஉள்ளதாவது:
காப்பீடு நிறுவனங்கள், யுலிப் திட்டத்தை, முதலீட்டு திட்டமாக விளம்பரப்படுத்தக் கூடாது. இத்திட்டங்கள் பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டு திட்டம் என்றும், அதற்கேற்றாற்போல் ரிஸ்க்குகளை கொண்டிருக்கும் என்றும் பாலிசிதாரர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
முதிர்ச்சி அடைந்தவுடன், ஒட்டுமொத்தமாக திருப்பி வழங்கப்படும் காப்பீடு திட்டங்களைப் போல இல்லாமல், பங்குச் சந்தையுடன் தொடர்புடைய காப்பீடு திட்டங்கள் மற்றும் ஆண்டுக்கு ஒருமுறை திருப்பி வழங்கப்படும் முதலீட்டு திட்டங்களில் உள்ள ரிஸ்க்குகள் குறித்து, ஆவணங்களில் வெளிப்படையாக குறிப்பிட்டிருக்க வேண்டும்.
இதுதொடர்பான விளம்பரங்கள், இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சிலின் வரையறைகளை கடைப்பிடித்து வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.