/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ டெலிவரி பார்ட்னர்களை காக்க ஆன்லைன் நிறுவனங்கள் நடவடிக்கை டெலிவரி பார்ட்னர்களை காக்க ஆன்லைன் நிறுவனங்கள் நடவடிக்கை
டெலிவரி பார்ட்னர்களை காக்க ஆன்லைன் நிறுவனங்கள் நடவடிக்கை
டெலிவரி பார்ட்னர்களை காக்க ஆன்லைன் நிறுவனங்கள் நடவடிக்கை
டெலிவரி பார்ட்னர்களை காக்க ஆன்லைன் நிறுவனங்கள் நடவடிக்கை
ADDED : ஜூன் 06, 2024 02:27 AM

புதுடில்லி,:நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை வீசி வரும் நிலையில், அதிலிருந்து தங்களது டெலிவரி பார்ட்னர்களை பாதுகாக்க, உணவு டெலிவரி மற்றும் மின்னணு வர்த்தக நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
டெலிவரி பார்ட்னர்கள், நேரங்காலமின்றி எந்நேரமும் பயணிக்க வேண்டியுள்ளதால், வெப்ப அலையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அவர்களை பாதுகாக்கும் நோக்கில், 'சொமாட்டோ, ஸ்விக்கி, பிளிங்கிட்' போன்ற நிறுவனங்கள், டெலிவரி பார்ட்னர்களுக்காக ஓய்வு நிலையங்களை அமைப்பது, அவசர ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்குவது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
நாடு முழுதும் சொமேட்டோ நிறுவனம், 450 ஓய்வெடுக்கும் நிலையங்களையும்; ஸ்விக்கி நிறுவனம், 900 ஓய்வெடுக்கும் நிலையங்களையும் அமைத்துள்ளன; எந்த உணவு டெலிவரி நிறுவனத்தைச் சேர்ந்தவரும் ஓய்வெடுத்துக் கொள்ளலாம்.
இருக்கை வசதி, இலவச குடிநீர், மொபைல் சார்ஜிங் போர்ட் மற்றும் சுத்தமான கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், டெலிவரி பார்ட்னர்களுக்கு வழங்குவதற்காக ஏராளமான தின்பண்டங்கள், பழச்சாறுகள் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை இந்நிலையங்களில் வாங்கி வைக்கப்பட்டுள்ளன.
சொமேட்டோவின் கீழ் இயங்கும் பிளிங்கிட் நிறுவனம், வெயிலில் பயணித்து வரும் டெலிவரி பார்ட்னர்களுக்கு உடனடியாக ஆறுதல் அளிக்கும் வகையில், கடைகளின் காத்திருப்பு இடங்களில் ஏர் கூலர்களை நிறுவியுள்ளது.
'பிளிப்கார்ட்' நிறுவனமும் இது போன்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.