Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ குரோ செயலி சர்ச்சை உணர்த்தும் முதலீட்டு பாடங்கள்

குரோ செயலி சர்ச்சை உணர்த்தும் முதலீட்டு பாடங்கள்

குரோ செயலி சர்ச்சை உணர்த்தும் முதலீட்டு பாடங்கள்

குரோ செயலி சர்ச்சை உணர்த்தும் முதலீட்டு பாடங்கள்

ADDED : ஜூலை 01, 2024 12:31 AM


Google News
Latest Tamil News
நிதி நுட்ப நிறுவனங்களின் வருகை காரணமாக, டிஜிட்டல் வழியில் நிதி செயல்பாடுகளை மேற்கொள்வது எளிதாகி இருக்கிறது. நிதி தகவல்களை தெரிந்து கொள்வதோடு, செயலி மூலமே முதலீடு செய்யவும் முடிகிறது.

டிஜிட்டல் மேடைகள் முதலீடு செய்வதை எளிதாக்கி இருந்தாலும், இதிலுள்ள இடர் அம்சங்களை அண்மையில் வெடித்துள்ள குரோ செயலி சர்ச்சையை உணர்த்தியுள்ளது. இந்த செயலி வாயிலாக மேற்கொள்ளப்பட்ட மியூச்சுவல் பண்ட் முதலீடு செயலாக்கம் பெறாமல் போனது தொடர்பாக, முதலீட்டாளர் ஒருவரின் புகார் இதற்கு மையமாக அமைந்தது.இந்த சர்ச்சை உணர்த்தும் முக்கிய பாடங்களை பார்க்கலாம்.

கவனம் தேவை:


குரோ முதலீடு சர்ச்சை தொடர்பாக நிறுவனம் விளக்கமளித்து, உரிய நடவடிக்கை எடுத்துஉள்ளதாக கூறினாலும், முதலீடு என்று வரும் போது முதலீட்டாளர்கள் தங்கள் தரப்பு பொறுப்பை உணர வேண்டும். முதலீடு தொடர்பான அடிப்படை அம்சங்களை அறிந்திருக்க வேண்டும்.

டிஜிட்டல் வசதி:


பொதுவாகவே நிதி பரிவர்த்தனைகளை உறுதி செய்து கொள்வது அவசியம். டிஜிட்டல் முறையில் இது கூடுதல் அழுத்தம் பெறுகிறது. முதலீடு முடிவை மேற்கொண்ட பிறகு அது செயலாக்கம் பெற்றுள்ளதா என பார்க்க வேண்டும். வங்கி கணக்கில் அது தொடர்பான பரிவர்த்தனையை உறுதி செய்ய வேண்டும்.

கண்காணிப்பு அவசியம்:


எந்த முதலீட்டின் செயல்பாடுகளையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மியூச்சுவல் பண்ட் முதலீடு எனில், அதன் செயல்பாடு தொடர்பாக அனுப்பி வைக்கப்படும் அறிக்கையை கவனமாக பார்க்க வேண்டும். முதலீடு செயல்பாட்டை இதன் மூலம் அறிவதோடு, அதன் நிலையையும் அறிந்து கொள்ளலாம்.

ஆவணங்கள் தேவை:


நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும். ரசீதுகள், அறிக்கைகள், நிதி கோரிக்கைகள் போன்றவை தொடர்பான ஆவணங்களை பராமரிக்கவேண்டும்.ஏதேனும் தவறு அல்லது திருத்தம் செய்ய வேண்டும் எனில் ஆவணங்கள் முக்கியம்.

விரிவாக்கம்:


முதலீட்டில் விரிவாக்கம் தேவை என்பது போல முதலீடு வழிகளிலும் விரிவாக்கம் தேவை. ஒரே மேடை வாயிலாக எல்லா முதலீடுகளையும் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். நிதி விஷயங்கள் தொடர்பான கட்டுப்பாடு அமைப்புகள்

விதிமுறைகளையும் அறிந்திருக்க வேண்டும். முதலீட்டாளர்கள் உரிமையையும் அறிந்திருக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us