/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ சந்திரபாபு நாயுடுவின் 'ஹெரிட்டேஜ்' பங்கு விலை 10% அதிகரிப்பு சந்திரபாபு நாயுடுவின் 'ஹெரிட்டேஜ்' பங்கு விலை 10% அதிகரிப்பு
சந்திரபாபு நாயுடுவின் 'ஹெரிட்டேஜ்' பங்கு விலை 10% அதிகரிப்பு
சந்திரபாபு நாயுடுவின் 'ஹெரிட்டேஜ்' பங்கு விலை 10% அதிகரிப்பு
சந்திரபாபு நாயுடுவின் 'ஹெரிட்டேஜ்' பங்கு விலை 10% அதிகரிப்பு
ADDED : ஜூன் 07, 2024 02:34 AM

புதுடில்லி: தெலுங்கு தேசம் கட்சியுடன் தொடர்புடைய நிறுவனங்களின் பங்கு விலை, நேற்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில், 10 சதவீதம் வரை உயர்ந்தது.
நேற்றைய மும்பை பங்குச் சந்தை வர்த்தகத்தில், 'ஹெரிட்டேஜ் புட்ஸ்' நிறுவனத்தின் பங்கு விலை, 10 சதவீதம் உயர்ந்து, 601.60 ரூபாய்க்கு வர்த்தகமானது. இதேபோல், 'அமர ராஜா எனர்ஜி அண்டு மொபிலிட்டி' நிறுவனத்தின் பங்கு விலையும், 6.91 சதவீதம் உயர்ந்து, 1,300 ரூபாய்க்கு வர்த்தகமானது.
சந்திரபாபு நாயுடுவின் மனைவி நர புவனேஸ்வரி, ஹெரிட்டேஜ் புட்ஸ் நிறுவனத்தில் 24.37 சதவீத பங்குடன் முக்கிய பங்குதாரராக உள்ளார். இவரது மகன் நர லோகேஷ், இந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவராக உள்ளார்.
அமர ராஜா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், தெலுங்கு தேசம் பார்லிமென்ட் கட்சி முன்னாள் தலைவர் ஆவார்.