ADDED : மார் 13, 2025 11:51 PM

மீண்டு(ம்) சரிவடைந்த சந்தை
வாரத்தின்
நான்காவது வர்த்தக நாளான நேற்று, சந்தை குறியீடுகள் இறக்கத்துடன்
நிறைவு செய்தன. நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் குறைந்தது,
ஜனவரியில் தொழில் துறை வளர்ச்சி மீண்டிருப்பது, உலகளாவிய போக்கு
ஆகியவற்றின் தொடர்ச்சியாக நேற்று வர்த்தகம் ஆரம்பித்தபோது, இந்திய
சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின.
டர்ந்து, முன்னணி நிறுவன
பங்குகளை வாங்குவதில்முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியதால், சந்தை உயர்வுடன் காணப்பட்டது.பிற்பகல்
வர்த்தகத்தில் மீண்டும் டிரம்பின் வரி விதிப்புகள், பொருளாதார
மந்த நிலை அச்சம் ஆகியவற்றுடன் வாராந்திர காலாவதியை ஒட்டி, லாபத்தை
பதிவு செய்ய பங்குகள் விற்பனை ஆகிய வற்றால், சந்தை சரிவுப்
பாதைக்கு திரும்பியது.
ஐ.டி., வாகன தயாரிப்பு மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவன பங்குகள் சரிவை கண்டன. இந்த வாரத்தில் தொடர்ச்சியாக நான்காவது நாளாகசென்செக்ஸ், இரண்டாவது நாளாக நிப்டி
இறக்கத்துடன் நிறைவு செய்தன.
ஐ.பி.ஓ., வருவதில் தயக்கம்
இந்திய
பங்குச் சந்தைகளில் சரிவு நீடிக்கும் நிலையில், புதிய பங்கு
வெளியீடு வாயிலாக, 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீட்டை திரட்ட
திட்டமிட்டிருந்த நிறுவனங்கள், பங்கு வெளியீட்டை தாமதப்படுத்தி
வருகின்றன.
கடந்த ஜனவரியோடு ஒப்பிடுகையில், பிப்ரவரியில்
ஐ.பி.ஓ., விண்ணப்பங்களின் மொத்த மதிப்பு 50 சதவீதமும், எண்ணிக்கை 29
நிறுவனங்களில் இருந்து 16 ஆக குறைந்து உள்ளது. கடந்த இரண்டு
மாதங்களில் சேர்த்து, ஒன்பது பெரிய நிறுவனங்கள் மட்டுமே ஐ.பி.ஓ.,
வெளியீட்டுக்கு வந்துள்ளன.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 793 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்றனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.34 சதவீதம் குறைந்து, 70.71 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 பைசா அதிகரித்து, 87.00 ரூபாயாக இருந்தது.