டெக்னிக்கல் அனாலிசிஸ் : திசை தெரியாத நிலை தொடரக்கூடும்
டெக்னிக்கல் அனாலிசிஸ் : திசை தெரியாத நிலை தொடரக்கூடும்
UPDATED : மே 22, 2026 01:51 AM
ADDED : மே 22, 2026 01:35 AM

நிப்டி
நேற்று நிப்டி 179 புள்ளிகள் அதிகரித்து துவங்கியது. ஆனால், வர்த்தகத்தின் இடையே அதிக ஏற்ற இறக்கங்களை சந்தித்த நிலையில், நாளின் இறுதியில் 4 புள்ளிகள் குறைந்து முடிந்தது. 18 பரந்த சந்தை குறியீடுகளில் 15 குறியீடுகள் ஏற்றத்துடனும், 3 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
இவற்றில், 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 1.10 சதவீத உயர்வுடனும், 'நிப்டி மிட்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 0.26 சதவீத சரிவுடனும் முடிந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 14 குறியீடுகள் ஏற்றத்துடனும், 7 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
இவற்றில, 'நிப்டி சிமென்ட்' குறியீடு அதிகபட்சமாக 2.41 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி மிட் ஸ்மால் பைனான்சியல் சர்வீசஸ்' குறியீடு அதிகபட்சமாக 0.68 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
![]() |
வர்த்தகம் நடந்த 3,381 நிறுவனங்களின் பங்குகளில் 1,908 உயர்வுடனும், 1,373 சரிவுடனும், 100 மாற்றம் ஏதும் இல்லாமலும் காணப்பட்டன. பியரிஷ் டு சைடுவேய்ஸ் என்ற டெக்னிக்கல் சூழல் இன்னமும் மாறவில்லை. மொமெண்டம் இண்டிக்கேட்டர்களான ஆர்.எஸ்.ஐ., மற்றும் எம்.ஏ.சி.டி., இன்னும் பலவீனத்தையே காட்டுகின்றன.
உடனடி சப்போர்ட் 23,500 என்ற லெவலிலும் ரெசிஸ்டென்ஸ் 23,930 என்ற லெவலிலும் இருக்கிறது. தற்போதைய டெக்னிக்கல் சூழலில் ஏற்றம் வந்தாலுமே அது நிலைத்து நிற்கும் என்று கூற முடியாது. தற்போதைய சூழலில் நிப்டி திசை தெரியா நிலையை அடைந்துள்ளது.
23,930 மேல் நிலைத்தால் அதை ஏற்றம் தொடர்வதற்கான முதல் சிக்னலாக வைத்துக்கொள்ளலாம். வலுவான சாதகமான செய்திகள் வந்தால் மட்டுமே சந்தையில் நிலையான ஏற்றம் உருவாகும் வாய்ப்பு உள்ளது.






