Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ 'பைபேக்' ஆலோசனையில் ¹'பஜாஜ் ஆட்டோ'

 'பைபேக்' ஆலோசனையில் ¹'பஜாஜ் ஆட்டோ'

 'பைபேக்' ஆலோசனையில் ¹'பஜாஜ் ஆட்டோ'


ADDED : மே 02, 2026 01:44 AM

Follow on Google

ADDED : மே 02, 2026 01:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ப ஜாஜ் ஆட்டோ' நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தனது நிறுவன பங்குகளை திரும்ப பெறுவது குறித்து ஆலோசிக்க உள்ளது.

இந்த அறிவிப்பு வெளியானதும், கடந்த வியாழக்கிழமை வர்த்தகத்திற்கு இடையில் இதன் பங்குகள் 3 சதவீதம் உயர்ந்து 9,775.50 ரூபாய்க்கு வர்த்தகமானது. அன்றைய வர்த்தக முடிவில் 4.72 சதவீத ஏற்றத்துடன் 9,994 ரூபாயில் நிறைவடைந்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த பங்கு 10 சதவீத லாபத்தை அளித்துள்ளது.

முக்கிய தகவல்கள்  வரும் 6ம் தேதி நடை பெறவுள்ள இயக்குநர் குழு கூட்டத்தில், 'பைபேக்' குறித்து அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படலாம்

 கடந்த 2024 மார்ச் மாதத்தில் ஒரு பங்கிற்கு 10,000 என்ற விலையில் நிறுவனம் 'பைபேக்' செய்தது

 'போபா செக்யூரிட்டீஸ்' தரகு நிறுவனம், இந்த பங்கை வாங்க சொல்லி பரிந்துரை செய்திருப்பதோடு, இலக்கு விலையை 10,700 ரூபாயாக உயர்த்தியுள்ளது.

நிதிநிலை வலுவாக இருக்கிறது 'பைபேக்' குறித்து நிபுணர்கள் கூறியதாவது: நிறுவனத்தின் நிதிநிலை வலுவாக இருப்பதையே இந்த 'பைபேக்' ஆலோசனை காட்டுகிறது. கடந்த பிப்ரவரி மாத தரவுகளின்படி, உள்நாட்டு மூன்று சக்கர வாகன விற்பனை 25 சதவீதம் அதிகரித்துள்ளதும், தற்போதைய உலகளாவிய பொருளாதார சூழலில், ஏற்றுமதி மற்றும் அன்னிய செலாவணி வாயிலாக கிடைக்கும் லாப சதவீதமும் இந்நிறுவனத்திற்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap