/செய்திகள்/வர்த்தகம்/ஜி.எஸ்.டி., சந்தேகங்கள்/ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (6)ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (6)
ADDED : செப் 16, 2024 01:32 PM
ஜி.எஸ்.டி.,யில் நிலவும் பிரச்னைகள், குறைபாடுகள், குளறுபடிகள், குற்றச்சாட்டுகள் மற்றும்
தீர்வுக்கான யோசனைகள் குறித்து வணிகர்கள் உள்ளிட்ட வரி செலுத்துவோர் எவரும் எழுதலாம் என்ற, 'தினமலர்' அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு; நுாற்றுக்கணக்கான கடிதங்களை எழுதி குவித்துவிட்டனர். அதன்விவரம், 'தினமலர்' இதழில் இப்பகுதியில் வெளியாகும்.
'ஜி.எஸ்.டி., பேமென்ட் செட்டில்மென்ட் கவுன்சில்' தேவை
எம்.எஸ்.எம்.இ., சப்-கான்டிராக்ட் தொழிலில் 25 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறேன். கார்ப்பரேட் நிறுவனங்களிடம் சப்-கான்டிராக்ட் எடுத்து செய்து தருகிறேன். பெரிய கட்டுமான நிறுவனங்கள், ஆரம்பத்தில் 'டிரையல் வொர்க்
ஆர்டர்' கொடுத்து, வேலையைத் தொடங்கச் செய்கின்றன. சில மாதங்கள் கடந்தாலும் 'வொர்க் ஆர்டர் அமெண்ட்மென்ட்' செய்வதில்லை. அதேபோல, 45 நாட்களுக்குள் பணம் கொடுக்க
வேண்டும் என சட்டம் இருந்தாலும், கால தாமதம் செய்கின்றனர்.
பணம் வழங்க தாமதம் ஆவதால், ஜி.எஸ்.டி., கட்டவும், இ.பி.எப்., கட்டவும் தாமதமாகிறது; கையில் இருந்து பணம்
செலவழிக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு மாதமும், 11ம் தேதி, ஜி.எஸ்.டி.ஆர்., 1பி, போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். 21ம் தேதிக்குள் ஜி.எஸ்.டி.ஆர்., 3பி பைல் செய்து, பணம் கட்ட வேண்டும். இல்லாவிட்டால், தினமும் மத்திய, மாநில அரசுகளுக்கு தலா ரூ.50 , தாமதக் கட்டணம் செலுத்த
வேண்டும். தவிர தினசரி வட்டி, மற்றும் 'டேமேஜஸ்' என, ஒரு
தவறுக்கு மூன்று விதங்களில்
அபராதம் வசூலிக்கின்றனர்.
நாங்கள் செய்யும் பணியின் மதிப்பு ரூ.100 என வைத்துக் கொண்டால், இ.பி.எப்., 25.5
சதவீதம், ஜி.எஸ்.டி., 18 சதவீதம் என, இதுவே 40 சதவீதத்தைத் தாண்டி விடுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் பணம் தராவிட்டால் நாங்கள் பெரும்
சிக்கலைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.
நாங்கள் ஜி.எஸ்.டி., கட்டா
விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கும் அரசு, எங்களுக்கு ஒரு பிரச்னை என்றால் தீர்க்கும் அமைப்பாகவும் இருக்க வேண்டும்தானே?
ஜி.எஸ்.டி.,-- இ.பி.எப்., கட்டாவிட்டால், நோட்டீஸ் அனுப்பு கின்றனர். வங்கிக் கணக்கை முடக்குகின்றனர். ஆனால், பணம் கொடுக்கவில்லை என, நாங்கள் யாரிடம் சென்று முறையிடுவது?
பில் தரவில்லை என நாங்கள்
கூறினால், 'அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. வரியைக் கட்டுங்கள். வசூலிப்பது மட்டுமே எங்கள் வேலை; உங்களை யார் தொழில் செய்யச் சொன்னது ' என, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கேட்கின்றனர். எப்படி தொழில் செய்வது? ஜி.எஸ்.டி., அமலுக்கு முன்பு 800-1,000 பேர் என் நிறுவனத்தில் பணிபுரிந்தனர். ஜி.எஸ்.டி., சிக்கலால் இப்போது 300 பேர்
வரைதான் பணியில் வைத்துள்ளேன்.
எதிர்பார்ப்பு
மாவட்டத்துக்கு ஒன்று அல்லது மூன்று மாவட்டங்களுக்கு ஒன்று என, 'ஜி.எஸ்.டி., பேமென்ட் செட்டில்மென்ட் கவுன்சில்' அமைத்து, உயர் அதிகாரியை நியமிக்க வேண்டும். ஜி.எஸ்.டி.ஆர்., 1பி, பைல் பண்ணியவர்கள், ஜி.எஸ்.டி.ஆர்., 3பி பண்ணுவதற்கு பணம் வழங்காத நிறுவனத்திடம் இருந்து, பணம் வசூலித்துத் தரும் அதிகாரம் அந்த அதிகாரிக்குத் தரப்பட வேண்டும்.
* எம்.எஸ்.எம்.இ., சப்-கான்டிராக்ட் வேலை செய்யும் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி.ஆர்.,1பி பைல் செய்த நாளில் இருந்து ஜி.எஸ்.டி.ஆர்., 3பி பைல் செய்வதற்கு 90 நாட்கள் கால
அவகாசம் வேண்டும்.
* ஜி.எஸ்.டி., தளத்தில், இன்வாய்ஸ் நம்பர் அடிப்படையில், பகுதி பகுதியாக பணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்.
* 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான காலத்துக்கு, தானாக முன்வந்து ஜி.எஸ்.டி., எண் ரத்து செய்த எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களின் வரி வட்டி மற்றும் அபராதம் ஆகியவற்றை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்.
- சின்னமுத்து, எஸ்.எம்.சி.எம்.,
கன்ஸ்ட்ரக்சன், சென்னை.
ஜி.எஸ்.டி., நடைமுறையில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், எதிர்பார்ப்பு, தீர்வு என
எதுவாயினும் உங்களின் கருத்துகளை எங்களுக்கு அனுப்புங்கள். 'தினமலர்' நாளிதழில்
வெளியாகி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தைப் பெறும். அனுப்புவோரின் விவரங்கள்
அவர்கள் விரும்பினால் மட்டுமே வெளியிடப்படும்.
முகவரி:
ஜி.எஸ்.டி., - தீர்வைத் தேடி!
தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ், சுந்தராபுரம், கோவை - 641 024.
Email: dmrgstviews@dinamalar.in