உலக ஸ்டார்ட்அப் மாநாடு தேதி அறிவிப்பு
உலக ஸ்டார்ட்அப் மாநாடு தேதி அறிவிப்பு
உலக ஸ்டார்ட்அப் மாநாடு தேதி அறிவிப்பு
ADDED : ஜூன் 08, 2025 12:11 AM

சென்னை:தமிழகத்தில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட, 'ஸ்டார்ட்அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு, சர்வதேச தொழில் தொடர்புகள், சந்தை வாய்ப்பு கிடைக்க, கோவை மாவட்டம், கொடிசியா அரங்கில், உலக ஸ்டார்ட்அப் மாநாட்டை, தமிழக அரசின் ஸ்டார்ட்அப் டி.என்., நடத்துகிறது.
இதில், அமெரிக்கா, சிங்கப்பூர் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், தொழில் கூட்டமைப்புகள் பங்கேற்கின்றன.
இந்த மாநாடு தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில், எந்த தேதியில் நடத்தப்பட இருக்கிறது என்ற தகவல் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், அக்., 9, 10ல் திட்டமிட்டபடி கோவை கொடிசியாவில் மாநாடு நடக்க இருப்பதாக, ஸ்டார்ட்அப் டி.என்., அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிய நிலையில், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், கல்லுாரி மாணவர்கள் என, பலரும் முன்பதிவு செய்து வருகின்றனர்.