சிவகங்கை தொழில் பூங்காவில் உள்கட்டமைப்புக்கு பணி ஆணை
சிவகங்கை தொழில் பூங்காவில் உள்கட்டமைப்புக்கு பணி ஆணை
சிவகங்கை தொழில் பூங்காவில் உள்கட்டமைப்புக்கு பணி ஆணை
ADDED : செப் 02, 2025 11:46 PM

சென்னை:சிவகங்கை மாவட்டம், இலுப்பைக்குடியில் தொழில் பூங்கா அமைக்க, 20 கோடி ரூபாயில் உள்கட்டமைப்பு வசதி மேற்கொள்வதற்கான பணி ஆணையை, தனியார் நிறுவனத்துக்கு, 'சிப்காட்' நிறுவனம் வழங்கியுள்ளது.
தென் மாவட்டமான சிவகங்கையில் தொழில் முதலீடுகளை ஈர்க்க, இலுப்பைக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில், 775 ஏக்கரில் புதிதாக தொழில் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு முதல் கட்டமாக, 20 கோடி ரூபாயில், 120 ஏக்கரில் தொழில் பூங்காவை உருவாக்கும் வகையில் சாலை, தண்ணீர், தெருவிளக்கு உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட உள்ளன.
இதற்கான பணி ஆணையை, 'சுகன்யா இன்ப்ராஸ்ட்ரக்சர்' என்ற தனியார் நிறுவனத்துக்கு, சிப்காட் நிறுவனம் வழங்கியுள்ளது. அங்கு அடுத்த ஆண்டு துவக்கத்திற்குள் தொழில் பூங்கா துவங்க திட்டமிடப்பட்டு உள்ளது.