Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ ஜெனரிக் மருந்துகள் இறக்குமதி வரி விதிப்பை கைவிட்ட அமெரிக்கா: இந்திய நிறுவனங்கள் பலன் பெறும்

ஜெனரிக் மருந்துகள் இறக்குமதி வரி விதிப்பை கைவிட்ட அமெரிக்கா: இந்திய நிறுவனங்கள் பலன் பெறும்

ஜெனரிக் மருந்துகள் இறக்குமதி வரி விதிப்பை கைவிட்ட அமெரிக்கா: இந்திய நிறுவனங்கள் பலன் பெறும்

ஜெனரிக் மருந்துகள் இறக்குமதி வரி விதிப்பை கைவிட்ட அமெரிக்கா: இந்திய நிறுவனங்கள் பலன் பெறும்

ADDED : அக் 10, 2025 01:37 AM


Google News
Latest Tamil News
வாஷிங்டன்:ஜெனரிக் மருந்துகள் இறக்குமதி மீது வரி விதிக்கும் திட்டத்தை கைவிட, டிரம்பின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக, பங்கு சந்தையில் இந்திய மருந்து நிறுவனங்களின் பங்குகள் நல்ல உயர்வு கண்டன.

அமெரிக்காவில் உயர் ரத்த அழுத்தம் முதல், மன அழுத்தம், குடல்புண், அதிக கொழுப்பு என பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு, லட்சக்கணக்கானோர் ஜெனரிக் மருந்துகளை சார்ந்துள்ளனர்.

அங்கு பரிந்துரைக்கப்படும் ஜெனரிக் மருந்துகளில், பாதியளவுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுபவை.

இந்நிலையில், அக்., 1 முதல் காப்புரிமை பெற்ற மருந்துகள் இறக்குமதி மீது, 100 சதவீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார். இதனிடையே டிரம்பின் உள்நாட்டு கொள்கை கவுன்சில், ஜெனரிக் மருந்துகளுக்கு வரி விதிப்பதால், அவற்றின் விலை உயர்வதுடன், பற்றாக்குறை ஏற்படலாம்.

இந்தியா போன்ற நாடுகளில் உற்பத்தி செலவு குறைவாக இருப்பதால், வரி விதிப்பானது அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு லாபத்தை தராது என வலியுறுத்தி உள்ளது.

ஒரு நிறுவனம் புதிய மருந்து கண்டுபிடித்தால், 20 ஆண்டுகளுக்கு அந்நிறுவனம் மட்டுமே அந்த மருந்தை தயாரித்து விற்பனை செய்ய முடியும். அதன்பின், காப்புரிமை காலாவதியாகி, எந்த நிறுவனமும் அதே மருந்தை தயாரித்து விற்கலாம். இதை ஜெனரிக் மருந்து என்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us