Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ வர்த்தக துளிகள்

 வர்த்தக துளிகள்

 வர்த்தக துளிகள்

 வர்த்தக துளிகள்

ADDED : மார் 10, 2026 02:06 AM


Google News
Latest Tamil News
இந்தியாவில் ஏ.பி.பி.,ரூ.690 கோடி முதலீடு

மி ன்மயமாக்கல் மற்றும் ஆட்டோமேஷன் துறை நிறுவனமான ஏ.பி.பி ., தனது உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு விரிவாக்கத்துக்காக இந்தியாவில் இவ்வாண்டு 690 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது. ஏற்கனவே, இந்நிறுவனம், 322 கோடி ரூபாயை இந்தியாவில் முதலீடு செய்துள்ளது. இவை இரண்டும் சேர்ந்து 'உள்நாட்டு தேவைக்காக உள்நாட்டில் உற்பத்தி' என்ற தனது கொள்கைக்கு வலு சேர்க்கும் என்று ஏ.பி.பி., கூறியுள்ளது. இந்நிறுவனத்தின் 85 சதவீத தயாரிப்புகள் இந்தியாவில் தயாராகின்றன.

ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா திரும்புகிறது

க டந்த 2017ல் இந்திய செயல்பாடுகளை நிறுத்திய ஜெனரல் மோட்டார்ஸ், தனது 'ஏசிடெல்கோ' பிராண்டு வாயிலாக இந்திய சந்தையில் மீண்டும் நுழைய உள்ளது. அந்நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த அஷ்யூரன்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, ஏசிடெல்கோவின் பெயரை பயன்படுத்தி, அஷ்யூரன்ஸ் நிறுவனம், ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் இதர நிறுவன கார் உதிரி பாகங்களை தயாரிக்கும். ஆரம்ப கட்டமாக 2 ஆண்டுகள் லுாப்ரிகண்ட், பேட்டரிகள் ஆகியவை உற்பத்தி செய்யப்படும்.

ஆக்சிஸ்--மேக்ஸ் லைப் பங்கு வெளியிட திட்டம்

ஆ க்சிஸ் வங்கி-, மேக்ஸ் பைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனங்கள் இணைந்து 'ஆக்சிஸ் மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ்' நிறுவனத்தை நடத்தி வருகின்றன. இக்கூட்டு நிறுவனத்தின் பங்குகளை ஏப்ரல் 2027 வாக்கில் பங்குச்சந்தையில் பட்டியலிட ஆக்சிஸ் திட்டமிட்டுள்ளது. இதற்காக மேக்ஸ் பைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இச்சூழலில், அந்நிறுவனத்தை ஆக்சிஸ் மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைக்கவும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us