ADDED : செப் 12, 2025 12:58 AM

அமெரிக்காவில் மருந்து ஆலை தி றந்தது பயோகான் நிறுவனம்
அ மெரிக்காவின் நியூ ஜெர்சியில் முதல் மருந்து தயாரிப்பு ஆலையை பயோகான் நிறுவனம் திறந்துள்ளது.
பெங்களூரை தலைமையிடமாக கொண்ட பயோகான், கடந்த 2023ல் எய்வா பார்மா நிறுவனத்துக்கு சொந்தமான ஓ.எஸ்.டி., ஆலையை வாங்கி, 258 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டு, உலக தரத்திலான ஆலையாக மாற்றியது.
ஆண்டுக்கு 200 கோடி மாத்திரைகள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த ஆலையில், பல்வேறு மருந்து தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த முதலீடு, மருந்து தயாரிப்பு, வினியோகம் மற்றும் உலகளாவிய விரிவாக்க நடவடிக்கையை விரைவுப்படுத்த உதவும் என்ற நம்பிக்கை பயோகான் தெரிவித்துள்ளது.
அமெரிக்க காப்பீடு நிறுவனம் ஹைதராபாதில் மையம்
அ மெரிக்காவைச் சேர்ந்த காப்பீடு நிறுவனமான ஹார்ட்போர்டு, கேப்ஜெமினி நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவின் ஹைதராபாதில் தொழில்நுட்ப மையத்தை துவங்கி உள்ளது.
பொறியியல் மையமாக செயல்பட உள்ள இம்மையம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், டிஜிட்டல் மாற்றம் மற்றும் நவீன தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்த உள்ளது.
'எங்கள் டிஜிட்டல், டேட்டா அனலிட்டிக்ஸ் மற்றும் ஏ.ஐ., திறன்களை பயன்படுத்தி விரைவான, நம்பகத்தன்மை மிக சிறந்த அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க உள்ளோம்' என, ஹார்ட்போர்டு தலைமை செயல் அதிகாரி ஜெப் ஹாக்கின்ஸ் தெரிவித்து உள்ளார்.