கிலோ ரூ.200ஐ எட்டிய கொப்பரை தேங்காய் எண்ணெய் விலை உயரும்
கிலோ ரூ.200ஐ எட்டிய கொப்பரை தேங்காய் எண்ணெய் விலை உயரும்
கிலோ ரூ.200ஐ எட்டிய கொப்பரை தேங்காய் எண்ணெய் விலை உயரும்
ADDED : மே 24, 2025 12:57 AM

ஈரோடு:ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் தேங்காய், கொப்பரை தேங்காய் உற்பத்தி அதிகம். கடந்த ஒன்றரை ஆண்டாக தேங்காய் விளைச்சல் மிக குறைந்து, கொப்பரை உற்பத்தி சரிந்து, விலை உயர்ந்து வருகிறது. அவல்பூந்துறையில் ஒரு கிலோ கொப்பரை, 199.29 ரூபாய்க்கு நேற்று விற்பனையானது.
இதுபற்றி வியாபாரிகள் கூறியதாவது:
மே முதல் அக்., வரை தேங்காய் அறுவடை சீசன். அதே காலத்தில் கொப்பரை தேங்காய் உற்பத்தியும் அதிகம் இருக்கும்.
வழக்கமாக கிலோ கொப்பரை அதிகபட்சம், 115 முதல், 120 ரூபாய்க்குள் விற்பனையாகும். இந்தாண்டு தொடர்ந்து, 170 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.
கடந்த, 21ல் பெருந்துறையில், முதல் தரம் கிலோ, 198.75 ரூபாய் வரை விலை போனது. தற்போது அவல்பூந்துறையில், 199.29 ரூபாயை தொட்டுள்ளது. அடுத்து பெருந்துறையில், 200 ரூபாயை கடக்கலாம் என எதிர்பார்க்கிறோம்.
கடந்தாண்டு இதே காலம், 5,000 மூட்டைக்கு மேல் பெருந்துறைக்கு கொப்பரை வரத்து இருந்தது.
தற்போது பாதி அளவே வருவதால் விலை உயர்கிறது. இதன் எதிரொலியாக, தேங்காய் எண்ணெய் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினர்.