
76 சதவீதம்
கடந்த ஆண்டில், பயன்படுத்திய அல்லது பழைய கார் வாங்கியவர்களில், முதல்முறையாக கார் வாங்கியவர்கள் 76 சதவீதம் பேர். அவர்களில் 60 சதவீதம் பெண்கள், ஆட்டோமெட்டிக் 'ஹேட்ச்பேக்ஸ்' கார்களையும், 18 சதவீதம் பெண்கள், 'எஸ்.யூ.வி.,' ரக கார்களையும் தேர்வு செய்ததாக, 'ஸ்பின்னி' நிறவனம் தெரிவித்து உள்ளது. வாடிக்கையாளர்களின் முன்னுரிமை அடிப்படையில், 'ரெனால்ட் குவிட், ஹூண்டாய் கிராண்ட் ஐ10, மாருதி ஸ்விப்ட்' ஆகிய கார்கள் முதல் மூன்று இடங்களை பிடித்தன.
40 வாகனங்கள்
டில்லியில் நடைபெறவுள்ள வாகனக் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் வாகனங்களின் எண்ணிக்கை 40ஐ தாண்டும் எனத் தெரிகிறது. டில்லி, கிரேட்டர் நொய்டா ஆகிய இடங்களில் வரும் ஜன., 17- - 22 வரை, 'பாரத் மொபிளிட்டி குளோபல் எக்ஸ்போ 2025' கண்காட்சி நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக, பாரத் பேட்டரி கண்காட்சியை திறந்து வைத்த மத்திய வர்த்தகத் துறை இணைச் செயலர் விமல் ஆனந்த், 'விசா தொடர்பான பிரச்னை தொடர்வதால், அதிக எண்ணிக்கையில், சீன நிறுவனங்கள் பங்கேற்பது சந்தேகம்' என்றார்.