தமிழக ஜி.டி.பி.,யில் உற்பத்தி துறை பங்கு 25 சதவிகிதம்
தமிழக ஜி.டி.பி.,யில் உற்பத்தி துறை பங்கு 25 சதவிகிதம்
தமிழக ஜி.டி.பி.,யில் உற்பத்தி துறை பங்கு 25 சதவிகிதம்
ADDED : மே 31, 2025 01:04 AM

சென்னை, மே 31-
'தமிழகம் மட்டும் தன் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில், 25 சதவீதம் உற்பத்தி துறையில் இருந்து பெற்று, நாட்டிற்கே வழிகாட்டும் மாநிலமாக உள்ளது' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த, 2014ல், 'மேக் இன் இந்தியா' திட்டம் துவக்கப்பட்ட போது, 2025க்குள் உற்பத்தி துறையின் பங்கை, ஜி.டி.பி.,யில், 25 சதவீதமாக உயர்த்துவதை இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தற்போது வரை, 16 சதவீதம் தான் எட்டப்பட்டுள்ளது. ஆனால், தமிழகம் மட்டும், தன் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில், 25 சதவீதம் உற்பத்தி துறையில் இருந்து பெற்று, நாட்டிற்கே வழிகாட்டும் மாநிலமாக உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.