நாட்டின் சரக்கு ஏற்றுமதி; 4வது மாதமாக சரிவு
நாட்டின் சரக்கு ஏற்றுமதி; 4வது மாதமாக சரிவு
நாட்டின் சரக்கு ஏற்றுமதி; 4வது மாதமாக சரிவு
ADDED : மார் 18, 2025 07:10 AM

நாட்டின் சரக்கு ஏற்றுமதி தொடர்ந்து நான்காவது மாதமாக, கடந்த பிப்ரவரியிலும் சரிந்துள்ளதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இடையேயான வித்தியாசத்தை குறிக்கும் வர்த்தகப் பற்றாக்குறையும், கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு மிகவும் குறைந்துள்ளது. பெட்ரோலியம் பொருட்கள் மற்றும் விலையுயர்ந்த உலோகங்களின் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாகவே, இறக்குமதி கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.