பட்டியலிடாத நிறுவனமாக டாடா சன்ஸ் நீடிக்க அனுமதி
பட்டியலிடாத நிறுவனமாக டாடா சன்ஸ் நீடிக்க அனுமதி
பட்டியலிடாத நிறுவனமாக டாடா சன்ஸ் நீடிக்க அனுமதி
ADDED : செப் 09, 2025 11:37 PM

புதுடில்லி:சால்ட் முதல் சாப்ட்வேர் வரையான டாடா வணிக நிறுவனங்களின் பெரும்பான்மை பங்குகளை கொண்ட டாடா சன்ஸ், பட்டியலிடப்படாத நிறுவனமாக தொடர ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
வங்கியல்லாத பெரிய நிதி நிறுவனங்கள், வரும் செப்., 30க்குள், பங்கு வெளியிட்டு சந்தைகளில் பட்டியலிடப்பட ரிசர்வ் வங்கி தரப்பில் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
என்.பி.எப்.சி., எனப்படும் வங்கியில்லாத நிதி நிறுவன உரிமத்தை டாடா சன்ஸ் கொண்டிருந்ததால், அதற்கும் இந்த விதி பொருந்தக்கூடியதாக இருந்தது. ஆனால், 2024 ஆக., மாதத்திலேயே தனது வங்கியல்லாத நிதி நிறுவன உரிமத்தை அந்நிறுவனம் ஒப்படைத்து விட்டது.
இதையடுத்து, தனிநபர்களின் கட்டுப்பாட்டில், பட்டியலிடப்படாத நிறுவனமாக தொடர, டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. அந்நிறுவனத்தின் 66.80 சதவீத பங்குகள் டாடா அறக்கட்டளைகளின் வசமுள்ளன. 18.60 சதவீத பங்குகள் மிஸ்திரி குடும்பத்திடம் இருக்கின்றன.
கடன் சுமையில் தவிக்கும் மிஸ்திரி குடும்பத்தினர், டாடா சன்ஸ் நிறுவனம் பட்டியலிடப் பட்டால், பொதுப் பங்கு விற்பனை வாயிலாக கடனில் இருந்து வெளியே வரலாம் என எதிர் பார்த்திருந்தனர்.