'சிம்பொனி' நிகர லாபம் 65 சதவிகிதம் உயர்வு
'சிம்பொனி' நிகர லாபம் 65 சதவிகிதம் உயர்வு
'சிம்பொனி' நிகர லாபம் 65 சதவிகிதம் உயர்வு
ADDED : மே 20, 2025 10:32 PM

சென்னை:ஏர்கூலர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சிம்பொனி, கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் 79 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டைவிட 65 சதவீதம் அதிகம்.
கடந்த 2024 ஜனவரி முதல் மார்ச் வரையான வருவாய் 332 கோடி ரூபாய் என்ற நிலையில், 2025ல் அதே காலத்தில் வருவாய் 47% உயர்ந்து 488 கோடியானது.
முதலீட்டாளர்களின் பங்கு மீது 8 ரூபாய் டிவிடென்டை சிம்பொனி அறிவித்துள்ளது.
இந்நிறுவனம் தனது தயாரிப்புகளை டவர் பேன், கிச்சன் கூலிங் பேன் என விரிவுபடுத்தியுள்ளது. மேலும், ஸ்டோரேஜ் வாட்டர் ஹீட்டர் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது.
இரண்டாம் நிலை நகரங்கள், கிராமப்புற சந்தைகளில் கவனம் செலுத்துவதாகவும், கூட்டு முயற்சி, மின்னணு விரிவாக்கம் போன்றவை வாயிலாக, சந்தையில் ஆதிக்கத்தை அதிகரிப்பதே குறிக்கோள் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.