ஆராய்ச்சி, மேம்பாடுக்கு ரூ.20,000 கோடி
ஆராய்ச்சி, மேம்பாடுக்கு ரூ.20,000 கோடி
ஆராய்ச்சி, மேம்பாடுக்கு ரூ.20,000 கோடி
ADDED : ஜூலை 01, 2025 10:59 PM

'சன்ரைஸ் செக்டார்ஸ்' எனப்படும், எதிர்கால வளர்ச்சிக்குரிய துறைகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு 20,000 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சுயசார்பு இந்தியா என்ற இலக்கை எட்டுவதில், தனியார் முதலீட்டை ஊக்குவிக்க, அரசு ஒப்புதல் அளித்துள்ள ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டு திட்டத்தில் இது இடம்பெற்றுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மின்வாகன உற்பத்தி, உயிர்வேதியல், மருந்து, உணவு பதப்படுத்தல், செமிகண்டக்டர், நிதித் தொழில்நுட்பம், பசுமை ஹைட்ரஜன், மின்னணு தொழில்நுட்பம் உள்ளிட்ட சன்ரைஸ் துறைகளின் புதுமைக் கண்டுபிடிப்பு, ஆராய்ச்சிக்கு நிதி தொகுப்பு பெறலாம்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ஸ்டார்ட்அப் துவங்க முன்வந்தால், பங்குகள் வடிவில் மத்திய அரசு அதில் நிதி வழங்கும்.