கொள்முதல் விலையை விட குறைவாக கோழி விற்பனை பண்ணையாளருக்கு இழப்பு
கொள்முதல் விலையை விட குறைவாக கோழி விற்பனை பண்ணையாளருக்கு இழப்பு
கொள்முதல் விலையை விட குறைவாக கோழி விற்பனை பண்ணையாளருக்கு இழப்பு
ADDED : செப் 16, 2025 12:01 AM

நாமக்கல் : கொள்முதல் விலையில் இருந்து, விலையை குறைத்து வாங்குவதால், கட்டுப்படியான விலை கிடைக்காமல் கறிக்கோழி பண்ணையாளர்களுக்கு, ஆறு மாதத்தில், 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்லடம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில், 30,000 கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இங்கு, தினமும், 40 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 1ம் தேதி, 1 கிலோ கறிக்கோழி, 107 ரூபாய்க்கு விற்ற நிலையில், படிப்படியாக 17 ரூபாய் உயர்ந்து, ஒரு வாரத்தில் 123 ரூபாயை எட்டியது.
இதுகுறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:
புரட்டாசியில் வழக்கமாக, 10 முதல், 20 சதவீதம் வரை விற்பனை சரியும். அவற்றை கணக்கிட்டு தாய் கோழிகளை, 70 வாரத்தில் விற்பனை செய்வதை தவிர்த்து, 60 வார தாய் கோழிகளை பண்ணையாளர்கள் விற்பனை செய்கின்றனர்.
கொள்முதல் விலை அதிகரித்தாலும், அந்த விலைக்கே கோழிகளை யாரும் வாங்குவதில்லை. ஒரு கிலோ கோழி உற்பத்தி செய்ய, 100 ரூபாய் செலவாகிறது. ஆனால், பி.சி.சி., நிர்ணயிக்கும் கொள்முதல் விலையில் இருந்து, 15 முதல், 20 ரூபாய் வரை குறைத்தே கோழிகளை வாங்குகின்றனர். அதன் காரணமாக, ஆறு மாதங்களில், பண்ணையாளர்களுக்கு, 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.