Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ கைகொடுக்காத பி.எல்.ஐ., திட்டம் மத்திய அரசு கைவிடுவதாக தகவல்

கைகொடுக்காத பி.எல்.ஐ., திட்டம் மத்திய அரசு கைவிடுவதாக தகவல்

கைகொடுக்காத பி.எல்.ஐ., திட்டம் மத்திய அரசு கைவிடுவதாக தகவல்

கைகொடுக்காத பி.எல்.ஐ., திட்டம் மத்திய அரசு கைவிடுவதாக தகவல்

ADDED : மார் 23, 2025 09:21 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி:நான்கு ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசால் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் துவங்கப்பட்டது, பி.எல்.ஐ., எனும் உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டம். இத்திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாததால், அரசு இத்திட்டத்தை கைவிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிட்டத்தட்ட 1.97 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தின் வாயிலாக, உள்நாட்டு தயாரிப்பை வலுப்படுத்தவும், இந்திய தயாரிப்பு துறையின் போட்டித் தன்மையை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டது.

பலன் இல்லை


சீனாவின் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள், அந்நாடு தொடர்பான அமெரிக்காவின் கொள்கையில் ஏற்பட்ட மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், தங்களது தயாரிப்புகளுக்கு நீண்ட காலமாக சீனாவை மட்டுமே சார்ந்திருந்த பன்னாட்டு நிறுவனங்கள், தங்களது தயாரிப்பு வசதிகளை பல்வகைப்படுத்த விரும்பின.

இதை பயன்படுத்திக்கொள்ள விரும்பிய இந்தியா, கடந்த 2020 நவம்பர் மாதம் பி.எல்.ஐ., திட்டத்தை அறிவித்தது.

இதன்படி, இந்தியாவில் தங்கள் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிர்ணயிக்கப்பட்ட உற்பத்தி மற்றும் விற்பனை வரம்பை எட்டும்பட்சத்தில், அதற்கேற்றவாறு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இத்திட்டம் துவங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ள நிலையில், எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என்றே தெரிகிறது.

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் தயாரிக்கும் பாக்ஸ்கான், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட 750 நிறுவனங்கள் இத்திட்டத்தில் பங்கெடுத்துஉள்ளன.

பரிசீலனை


கடந்தாண்டு அக்டோபர் மாத நிலவரப்படி, இந்நிறுவனங்கள் அனைத்தும் சேர்ந்து, 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை தயாரித்து உள்ளன.

இது, மத்திய அரசு நிர்ணயித்த இலக்கில் 40 சதவீதத்துக்கும் குறைவாகும்.

இவற்றுக்கு 14,020 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இது, பி.எல்.ஐ., திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் 8 சதவீதத்துக்கும் குறைவாகும்.

இதுவரை 14 துறை / தொழில்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், எதிர்பார்த்த பலன்களை தராததால், இனி வேறு துறைகளுக்கு நீட்டிக்கப்படாது என்றும்; உற்பத்தி காலக்கெடுவை பின்பற்றாத நிறுவனங்களுக்கு நீட்டிப்பு வழங்கப்படாது என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரும் 2026 - 27 நிதியாண்டுடன் இத்திட்டம் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டம் நிறுத்தப்படுவதால், தயாரிப்பு துறை கைவிடப்படுவதாக அர்த்தமில்லை என்றும், வேறு வழிகளில் ஊக்கமளிக்கப்படும் என்றும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது உற்பத்தி மற்றும் விற்பனையை பொறுத்தே ஊக்கத்தொகை வழங்கப்படும் நிலையில், இனி வரும் காலங்களில் நிறுவனங்கள் ஆலை அமைப்பதை பொறுத்து, அதற்கு ஏற்பட்ட செலவில் குறிப்பிட்ட தொகையை அரசு திருப்பி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

 ஸ்மார்ட் போன்

 முக்கிய மருந்து பொருட்கள்

 மருத்துவ சாதனங்கள்

 வாகனம்

 மருந்து பொருட்கள்

 ஸ்பெஷாலிட்டி ஸ்டீல்

 தொலைதொடர்பு சாதனங்கள்

 மின்னணுவியல் சாதனங்கள்

 'டிவி, ஏசி' மற்றும் வாஷிங் மெஷின்

 உணவுப் பொருட்கள்

 ஜவுளி

 சோலார் மாட்யூல்கள்

 ஏ.சி.சி., பேட்டரி

 ட்ரோன்

நிலைமை

பயன் பெறும் தொழில் / துறைகள்



 ஸ்மார்ட் போன் உற்பத்தி 63 சதவீதம் அதிகரித்துஉள்ளது

 மருந்து உற்பத்தியும் கணிசமாக அதிகரித்துள்ளது

 சோலார் பேனல், ஸ்டீல் ஆகிய துறைகளில் உற்பத்தி இலக்கை அடைய இயலவில்லை

 ஸ்டீல் துறையில் தேர்வு செய்யப்பட்ட 58 நிறுவனங்களில், 14 நிறுவனங்கள் எந்த செயல்பாடும் இல்லாததால் நீக்கப்பட்டுவிட்டன.

பாதிப்புக்கு காரணங்கள்

 ஊக்கத்தொகை வழங்குவதில் ஏற்படும் தாமதம்

 அதிகப்படியான ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள்

 அரசு நிர்வாகிகளின் அதீத எச்சரிக்கை உணர்வு.

பயன் பெறும் தொழில் / துறைகள்



நிதி ஒதுக்கீடு

ரூ.1.97 லட்சம் கோடி பயன்பாடு ரூ.14,020 கோடி முதலீடுரூ.1.61 லட்சம் கோடிஉற்பத்திரூ.14 லட்சம் கோடி வேலைவாய்ப்பு இலக்கு60 லட்சம்வேலைவாய்ப்பு உருவாக்கம்11.50 லட்சம்(2024 நவம்பர் நிலவரப்படி)



நிதி ஒதுக்கீடு

ரூ.1.97 லட்சம் கோடி பயன்பாடு ரூ.14,020 கோடி முதலீடுரூ.1.61 லட்சம் கோடிஉற்பத்திரூ.14 லட்சம் கோடி வேலைவாய்ப்பு இலக்கு60 லட்சம்வேலைவாய்ப்பு உருவாக்கம்11.50 லட்சம்(2024 நவம்பர் நிலவரப்படி)







      Our Apps Available On




      Dinamalar

      Follow us