சீன கண்ணாடிக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க பரிந்துரை
சீன கண்ணாடிக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க பரிந்துரை
சீன கண்ணாடிக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க பரிந்துரை
ADDED : செப் 12, 2025 01:06 AM

புதுடில்லி:சீனா, பஹ்ரைன், தாய்லாந்து நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கண்ணாடி இழைகளுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க, டி.ஜி.டி.ஆர்., எனும் வர்த்தக தீர்வுகளுக்கான பொது இயக்குநரகம் பரிந்துரை செய்துள்ளது.
மலிவான இறக்குமதிகளில் இருந்து உள்நாட்டு தொழில்துறையினரை பாதுகாக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கண்ணாடி இழைகளின் வழக்கமான விலையைக் காட்டிலும், இந்தியாவுக்கு குறைவான விலையில் இதை மூன்று நாடுகளும் ஏற்ற்மதி செய்வது விசாரணையில் உறுதியானதாக டி.ஜி.டி.ஆர்., தெரிவித்துள்ளது.
எனவே, இந்நாடுகளில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கண்ணாடி இழைகளுக்கு ஒரு டன்னுக்கு 17,000 ரூபாயிலிருந்து 34,700 ரூபாய் வரை வரி விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பரிந்துரையை ஏற்று, வரி விதிப்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் தான் இறுதி முடிவு எடுக்கும்.