'செமிகான் இந்தியா' துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
'செமிகான் இந்தியா' துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
'செமிகான் இந்தியா' துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
ADDED : செப் 01, 2025 11:15 PM

புதுடில்லி: 'செமிகான் இந்தியா 2025' மாநாட்டை பிரதமர் மோடி இன்று டில்லியில் துவக்கி வைக்கிறார்.
டில்லியில் உள்ள யஷோ பூ மியில் இன்று முதல் 4-ம் தேதி வரை செமிகான் இந்தியா 2025 மாநாடு நடக்கவுள்ளது. இதில் சிங்கப்பூர், மலேஷியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நான்கு நாடுகளின் பெவிலியன்கள் இடம்பெற உள்ளன.
அமெரிக்கா, நெதர்லாந்து, ஜப்பான் சிங்கப்பூர், தென்கொரியா, மலேஷியா ஆகிய ஆறு நாடுகளுடன் வட்டமேசை சந்திப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 33 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
மேலும், 350 கண்காட்சியாளர்கள் இம்மாநாட்டில் அரங்குகளை வைக்கவுள்ளனர். 1,100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஐ.பி.எம்., மைக்ரான், டாடா எலக்ட்ரானிக்ஸ், டோக்கியோ எலக்ட்ரான் உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன.