விமான விபத்து: உதவ டாடா அறக்கட்டளை
விமான விபத்து: உதவ டாடா அறக்கட்டளை
விமான விபத்து: உதவ டாடா அறக்கட்டளை
ADDED : ஜூன் 28, 2025 01:05 AM

புதுடில்லி:ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக, டாடா சன்ஸ் நிறுவனம் 500 கோடி ரூபாயில் அறக்கட்டளை ஒன்றை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
சமீபத்தில், ஏர் இந்தியா விமானம், குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகே விபத்தில் சிக்கியது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு, காயமடைந்தவருக்கு மருத்துவ உதவி மற்றும் நீண்டகால உதவிகளை வழங்கும் வகையில், 500 கோடி ரூபாய் மதிப்பிலான அறக்கட்டளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக, டாடா சன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விபத்தில் உயிரிழந்த இந்திய மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு, மருத்துவம், கல்வி மற்றும் அன்றாட வாழ்க்கைக்கு தேவையானவை போன்ற விரிவான உதவிகள் இந்த அறக்கட்டளை வாயிலாக வழங்கப்படும்.
இத்திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளிக்குமாறு டாடா குழுமத்தின் நிர்வாகக் குழுவை, டாடா சன்ஸ் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.