தேவை 'யுனிகார்ன் கிளப்' பியுஷ் கோயல் கருத்து
தேவை 'யுனிகார்ன் கிளப்' பியுஷ் கோயல் கருத்து
தேவை 'யுனிகார்ன் கிளப்' பியுஷ் கோயல் கருத்து
ADDED : ஜன 31, 2024 12:43 AM

புதுடில்லி, ஜன. 31-
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பட்டுத் துறை சார்பில், 'ஸ்டார்ட்அப் இந்தியா புத்தாக்க வாரம்' கொண்டாடப்பட்டது.
இதுகுறித்து தொழில் துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.
இம்மாதம் 10 முதல் 18ம் தேதி வரை, நாடு முழுவதும் உள்ள முக்கிய ஸ்டார்ட்அப்கள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் புத்தாக்க தொழில்முனைவோர் ஒன்றிணைந்து 'ஸ்டார்ட்அப் இந்தியா புத்தாக்க வாரம்' கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில், மாணவர்கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக, 'வளர்ந்து வரும் தொழில்முனைவோருக்கான ஐந்து தனிச்சிறப்பு இணையவழி கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. பல நகரங்களில், வட்டமேசை மாநாடுகள் தொழிற்துறையினர் விவாதங்களுடன் நடத்தப்பட்டன. இது எதிர்கால ஸ்டார்ட்அப்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்கும் வகையில் அமைந்தன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்ட மேசை மாநாட்டு விவாதங்களுக்கு மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், “யூனிகார்ன் நிறுவனங்கள் ஒன்றிணைந்து, யூனிகார்ன் கிளப் அல்லது சங்கத்தை அமைக்க வேண்டும். இது ஸ்டார்ட்அப்களுக்கு தேவையான மூலதனத்தை கொண்டு வருவதற்கு உதவும்,” என்றார்.