'சீனாவிடமிருந்து காந்தத்துக்காக இனி காத்திருக்க வேண்டியதில்லை'
'சீனாவிடமிருந்து காந்தத்துக்காக இனி காத்திருக்க வேண்டியதில்லை'
'சீனாவிடமிருந்து காந்தத்துக்காக இனி காத்திருக்க வேண்டியதில்லை'
ADDED : செப் 17, 2025 03:11 AM

புதுடில்லி:உள்நாட்டு மின்சார இருசக்கர வாகன தயாரிப்பாளரான 'சிம்பிள் எனர்ஜி' நிறுவனம், அரிய வகை தனிமங்களை பயன்படுத்தி உருவாக்கப்படும் காந்தம் இல்லாத இந்தியாவின் முதல் மோட்டாரை தயாரிக்கும் பணியை துவங்கியுள்ளது.
மின்சார வாகன உற்பத்தியில் காந்தங்கள் மிக முக்கிய பங்காற்றி வருகின்றன. உலகளவில் இதன் மிகப்பெரிய உற்பத்தியாளரான சீனா, இவற்றின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால், கடந்த சில மாதங்களாகவே இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும், மின்சார வாகன உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சிக்கலுக்குத் தீர்வு காணும் விதமாக, சிம்பிள் எனர்ஜி நிறுவனம், இந்த வகை காந்தங்கள் தேவைப்படாத வகையில், மின்சார இரு சக்கர வாகன மோட்டாரை தயாரித்து வருகிறது. நிறுவனத்தின் சொந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு குழு இதை வடிவமைத்து உரிமம் பெற்றுள்ளது. இதையடுத்து, இனி காந்தத்துக்காக சீனாவை அதிகம் சார்ந்திருக்க வேண்டியதிருக்காது என நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிம்பிள் எனர்ஜி நிறுவனம் அடுத்த நிதியாண்டுக்குள் புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக கிட்டத்தட்ட 3,000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.