நிப்டி ராணுவ நிறுவனங்கள் குறியீடு 2 சதவிகித்ம் உயர்வு
நிப்டி ராணுவ நிறுவனங்கள் குறியீடு 2 சதவிகித்ம் உயர்வு
நிப்டி ராணுவ நிறுவனங்கள் குறியீடு 2 சதவிகித்ம் உயர்வு
ADDED : ஜூலை 04, 2025 11:05 PM

மும்பை:ராணுவ கவச வாகனங்கள், ஆயுதங்கள், இதர அமைப்புகளை பெற, 1.05 லட்சம் கோடி ரூபாய்க்கு ராணுவ கொள்முதல் கவுன்சில், ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில், பங்குச் சந்தையின் நிப்டி ராணுவ குறியீடு, 1.76 சதவீதம் வரை அதிகரித்து, 9,012.60 புள்ளிகளுக்கு உயர்ந்தது.
அதாவது, ராணுவ உற்பத்தியை மேற்கொள்ளும் நிறுவனங்களின் பங்கு விலை, அதிகபட்சமாக 9 சதவீதம் வரை உயர்ந்தன. பரஸ் டிபன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை, 9 சதவீதமும்; ஆஸ்ட்ரா நிறுவனத்தின் பங்கு விலை, 4.79; பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை, 4.53 சதவீதமும் உயர்ந்தன.