நான்கு நிறுவனங்களுக்கு விரைவில் 'நவரத்னா'
நான்கு நிறுவனங்களுக்கு விரைவில் 'நவரத்னா'
நான்கு நிறுவனங்களுக்கு விரைவில் 'நவரத்னா'
ADDED : மே 29, 2025 01:35 AM

'மினிரத்னா' அந்தஸ்து பெற்ற, நான்கு பொதுத் துறை நிறுவனங்களுக்கு, மத்திய அரசு விரைவில் 'நவரத்னா' அந்தஸ்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொச்சின் ஷிப்யார்டு, கோவா ஷிப்யார்டு, ஜி.ஆர்.எஸ்.இ., எனப்படும் கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் அண்டு இன்ஜினியர்ஸ்,எம்.ஓ.ஐ.எல்., எனப்படும் மேங்கனீஸ் ஓர் மைனிங் கம்பெனி ஆகியவை அவை.
துறைச் செயலர்கள் குழுவில் இதுபற்றி தற்போது விவாதம் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் அரசுக்கு பரிந்துரை அனுப்பப்படும் எனத் தெரிகிறது. பிறகு, மத்திய பொது நிறுவனங்கள் துறை இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும்.
நவரத்னா அந்தஸ்து பெறும் நிறுவனங்கள், அரசின் ஒப்புதலின்றி 1,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.