மலிவு விலையில் சூரிய மின்சாரம் கொள்முதல் செய்கிறது ம.பி., அரசு
மலிவு விலையில் சூரிய மின்சாரம் கொள்முதல் செய்கிறது ம.பி., அரசு
மலிவு விலையில் சூரிய மின்சாரம் கொள்முதல் செய்கிறது ம.பி., அரசு
ADDED : செப் 22, 2025 01:40 AM

போபால்:நாட்டிலேயே மிக குறைந்த விலையில், நிறுவனங்களிடம் இருந்து சூரிய மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு, ம.பி., அரசு சாதனை படைத்து உள்ளது.
இது குறித்து, புதுப்பிக்கத்தக்க மின்சார துறை அதிகாரி மனு ஸ்ரீவத்சவா தெரிவித்ததாவது:
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில், சி.இ.ஐ..ஜி.ஏ.எல்.எல்., இந்தியா மற்றும் ஏ.சி.எம்.இ., சோலார் ஆகிய நிறுவனங்கள், 1 யூனிட் மின்சாரத்தை முறையே 2.70 மற்றும் 2.764 ரூபாய்க்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளன.
இது, மாநிலங்கள் மின்சாரத்தை வாங்கும் முறையை மாற்றியமைக்கும். இந்த ஒப்பந்தம் சேமிப்பு வசதியுடன் கூடிய புதுப்பிக்கத்தக்க மின்சாரம், நிலக்கரி மின்சாரத்தை விட விலை குறைவாக கிடைக்கும் என்பதை வெளிப்படுத்தி உள்ளது.
இரண்டு ஆலைகளில் இருந்து பகல் நேரங்களில் 220 மெகாவாட் மின்சாரம், அரசுக்கு வினியோகம் செய்யப்படும். மாலை நேரங்களில் சோலார் மின்சாரத்தால் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகளில் இருந்து மின்சாரம் வினியோகிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.