வணிகம் செய்வதை எளிதாக்க வர்த்தக அமைச்சகம் நடவடிக்கை
வணிகம் செய்வதை எளிதாக்க வர்த்தக அமைச்சகம் நடவடிக்கை
வணிகம் செய்வதை எளிதாக்க வர்த்தக அமைச்சகம் நடவடிக்கை
ADDED : செப் 22, 2025 11:05 PM

புதுடில்லி : நாட்டில் வணிகம் செய்யும் சூழலை எளிதாக்கும் வகையில், 12,167 எச்.எஸ்.என்., குறியீடுகளை, சம்பந்தப்பட்ட 31 அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் இணைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, தரவு அடிப்படையிலான அணுகுமுறையை பின்பற்றி, ஒழுங்குமுறை செயல்முறை களை மேம்படுத்தி, வணி கம் செய்வதை மேலும் எளி தாக்க முடியும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச வர்த்தகத்தில், ஒவ்வொரு பொருளும் ஒரு எச்.எஸ்.என்., குறியீட்டின் கீழ் வகைப்படுத்தப்படுகிறது. இது உலகளாவிய அளவில் பொருட்களை முறையாக வகைப்படுத்த உதவுகிறது.
வர்த்தக பேச்சுகள், இறக்குமதி மாற்று முயற்சிகள் மற்றும் தொழில்துறை சார்ந்த குறைகளை நிவர்த்தி செய்வதில், இந்த குறியீடுகளுக்கென ஒரு குறிப்பிட்ட அமைச்சகம் அல்லது துறை இல்லாததால், பல சிக்கல்கள் ஏற்பட்டன.
இந்த சிக்கல்களை தீர்க்கவே தற்போது இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. சில குறியீடுகள் எந்தத் துறைக்கும் சொந்தமில்லாததால், அவை 'எஞ்சிய பொருட்கள்' என தவறாக வகைப்படுத்தப்பட்டன.
இந்த சிக்கலை சரிசெய்ய, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்திடம் இருந்து பெற்ற 12,167 எச்.எஸ்.என்., குறியீடுகளில் ஒவ்வொன்றையும் பகுப்பாய்வு செய்துள்ளது.
இதன்பிறகு, ஒவ்வொரு குறியீடும், பொருளின் தன்மை மற்றும் அதன் இறுதி பயன்பாட்டின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட விதிகளின் கீழ் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, பொருத்தமான அமைச்சகத்துடன் இணைக்கப்பட்டுஉள்ளது.
பிற நாடுகளுடன் நடத்தப்படும் வர்த்தக ஒப்பந்த பேச்சுகளில், எச்.எஸ்.என்., குறியீடு இணைப்பு உதவும் இந்த பேச்சுகளில், நம் நாட்டின் முன்னுரிமைகள் மற்றும் துறை சார்ந்த வலிமையை மேலும் திறம்பட பயன்படுத்த முடியும்.