ஆய்வக வைரம் தரநிலை மாற்றம் கவுன்சில் வரவேற்பு
ஆய்வக வைரம் தரநிலை மாற்றம் கவுன்சில் வரவேற்பு
ஆய்வக வைரம் தரநிலை மாற்றம் கவுன்சில் வரவேற்பு
ADDED : ஜூன் 03, 2025 11:03 PM

புதுடில்லி:ஆய்வக வைரங்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட '4சி' தரப்படுத்துதல் முறையை இனி பயன்படுத்துவதில்லை என்ற அமெரிக்காவின் ஜெமாலாஜிக்கல் இன்ஸ்டிடியூட்டின் முடிவை இந்திய ரத்தினங்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வரவேற்றுள்ளது.
கவுன்சில் தலைவர் கிரித் பன்சாலி தெரிவித்திருப்பதாவது:
ஆய்வகங்களில் உருவாக்கப்படும் வைரங்களுக்கு, பிரபலமான 4சி தரப்படுத்தலை கைவிடுவதாக அமெரிக்க ஜெமாலாஜிக்கல் இன்ஸ்டிடியூட்டின் முடிவு செய்துள்ளது.
வைர வகைப்பாட்டில் இது ஒரு முக்கியமான பரிமாணத்தை குறிக்கிறது. இந்த மாற்றம் இயற்கை வைரங்களுக்கான தரநிலைகளில் இருந்து ஆய்வக வைரங்களை வேறுபடுத்துவதன் வாயிலாக காணப்படும் குழப்பத்தை நீக்க உதவும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.