சென்னையில் ஜே.கே., டயர்ஸ் பசுமை டயர்கள் தயாரிப்பு
சென்னையில் ஜே.கே., டயர்ஸ் பசுமை டயர்கள் தயாரிப்பு
சென்னையில் ஜே.கே., டயர்ஸ் பசுமை டயர்கள் தயாரிப்பு
ADDED : மே 16, 2025 02:17 AM

சென்னை:சென்னையில் உள்ள ஆலையில், யூ.எக்ஸ்., - ராயல் கிரீன் என்ற பசுமை சான்றிதழ் பெற்ற பயணியர் கார் டயரின் உற்பத்தி துவங்கியதாக ஜே.கே., டயர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த டயர், ஐ.எஸ்.சி.சி., பிளஸ் என்ற சர்வதேச நிலைத்தன்மை மற்றும் கார்பன் சான்றிதழ் பெற்ற இந்தியாவின் முதல் டயர் ஆகும்.
டயர் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள், பசுமை பொருட்களாகவும், குறைவான கார்பன் உமிழ்வு, மறுசுழற்சி செய்யும் வாய்ப்பு ஆகியவையும் இருந்தால், இந்த சான்றிதழ் வழங்கப்படும். பத்து ஆண்டுகள் ஆராய்ச்சி மேற்கொண்டு, இந்த டயர் உருவாக்கப்பட்டதாக இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரகுபதி சிங்கானியா தெரிவித்து உள்ளார்.