ஜியோ சந்தாதாரர்கள் தமிழகத்தில் 2.46 கோடி
ஜியோ சந்தாதாரர்கள் தமிழகத்தில் 2.46 கோடி
ஜியோ சந்தாதாரர்கள் தமிழகத்தில் 2.46 கோடி
ADDED : ஜூன் 05, 2025 01:04 AM

சென்னை:தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 65,000க்கும் மேல் புதிய சந்தாதாரர்களை தன் சேவை நெட்வொர்க்கில் சேர்த்துள்ளது.
இது குறித்து ஜியோ வெளியிட்ட அறிக்கை:
டிராய் வெளியிட்ட தரவின்படி, தமிழகத்தில் ஜியோவின் மொத்த சந்தாதாரர்கள் எண்ணிக்கை 2.46 கோடியை தாண்டியுள்ளது.
ஜியோ ஏர்பைபர் சேவையை 23,000க்கும் மேற்பட்டோர் ஏப்ரலில் பெற்றுள்ளனர். இதன் வாயிலாக, தமிழகத்தில் மொத்த ஜியோ ஏர்பைபர் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 4.96 லட்சமாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் மொபைல் சந்தாதாரர்கள் சந்தையில் 31.9 சதவீத பங்குடனும்; ஏர்பைபர் 5ஜி சந்தையில் 65 சதவீத பங்குடனும் ஜியோ முன்னிலை வகிக்கிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.