எம்.எஸ்.எம்.இ.,களுக்கான முதலீட்டு வரம்புகள் அதிகரிப்பு
எம்.எஸ்.எம்.இ.,களுக்கான முதலீட்டு வரம்புகள் அதிகரிப்பு
எம்.எஸ்.எம்.இ.,களுக்கான முதலீட்டு வரம்புகள் அதிகரிப்பு
ADDED : மார் 23, 2025 09:29 PM

புதுடில்லி:அனைத்து சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக் கான முதலீடு மற்றும் வருவாய் வரம்புகளை அதிகரித்து மத்திய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் எம்.எஸ்.எம்.இ., எனப்படும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை வளர்க்கும் நோக்கில், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை வரையறுக்கும் முதலீடு மற்றும் வருவாய் வரம்புகளுக்கான கொள்கையில் திருத்தம் செய்து அதிகாரபூர்வமாக மத்திய எம்.எஸ்.எம்.இ., அமைச்சகம் அறிவித்துள்ளது.
முதலீடு மற்றும் வருவாய் வரம்பு அதிகரிப்பால், பணவீக்கம் மற்றும் வணிக விரிவாக்கம் காரணமாக எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கான அந்தஸ்தை இழக்கும் அபாயம் தவிர்க்கப்படும்.
மேலும், இத்துறைக்கு வழங்கப்படும் மானியங்கள் மற்றும் வரி ஊக்கத்தொகைகள் போன்ற பல்வேறு நன்மைகளை இழக்காமல் நிறுவனங்கள் தற்போது வலிமையுடன் வளர முடியும் என அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இத்துடன், மூலதனம் மற்றும் பணவீக்கத்தின் அதிகரித்து வரும் செலவை கணக்கிட திருத்தங்கள் தேவை என நீண்ட கால தொழிற்துறையினரின் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதுவும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.