தொழில் துறை வளர்ச்சி 2.70 சதவீதமாக சரிவு
தொழில் துறை வளர்ச்சி 2.70 சதவீதமாக சரிவு
தொழில் துறை வளர்ச்சி 2.70 சதவீதமாக சரிவு
ADDED : மே 29, 2025 01:33 AM

புதுடில்லி : நாட்டின் தொழில்துறை உற்பத்தி, கடந்த ஏப்ரல் மாதத்தில் 2.70 சதவீதமாக குறைந்துள்ளது என, மத்திய புள்ளியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது, கடந்தாண்டு ஏப்ரலில் 5.20 சதவீதமாக இருந்தது.
சுரங்கம் மற்றும் மின்சார துறைகளின் வளர்ச்சி கடுமையாக சரிந்ததே, கடந்த மாதம் வளர்ச்சி சரிய முக்கிய காரணமாக அமைந்துள்ளது. தயாரிப்பு துறையின் வளர்ச்சி, கடந்தாண்டு ஏப்ரலில் 4.20 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பாண்டு ஏப்ரலில் 3.40 சதவீதமாக குறைந்துள்ளது.
சுரங்கத்துறை வளர்ச்சி 6.80 சதவீதத்திலிருந்து 0.20 சதவீதமாகவும்; மின்சாரத் துறையின் வளர்ச்சி 10.20 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாகவும் சரிந்துள்ளது. இதனிடையே, கடந்த மார்ச் மாதத்துக்கான தொழில்துறை வளர்ச்சி முன்பிருந்த 3 சதவீதத்தில் இருந்து 3.90 சதவீதமாக திருத்தப்பட்டுள்ளது.