இந்தியாவின் முதல் 'சிப்' இந்தாண்டில் அறிமுகம்
இந்தியாவின் முதல் 'சிப்' இந்தாண்டில் அறிமுகம்
இந்தியாவின் முதல் 'சிப்' இந்தாண்டில் அறிமுகம்
ADDED : மே 29, 2025 11:31 PM

புதுடில்லி:இந்தியாவின் தயாரிக்கப்படும் முதல் 28 - -90 என்.எம்., சிப், இந்தாண்டுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.
டில்லியில் நடைபெற்ற சி.ஐ.ஐ., தொழில் மாநாட்டில் அவர் தெரிவித்ததாவது:
சிப் தயாரிப்பு தொடர்பாக பலர் நம்மை விமர்சித்து வருகின்றனர். நாம் குறிப்பிட்ட பிரிவில், சந்தையில் 60 சதவீத இடத்தைப் பிடிக்கும் வகையில், சிப் தயாரிக்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம்.
இந்தியாவில் தற்போது ஆறு சிப் ஆலைகள் கட்டுமான பணியில் உள்ளன. முதல்கட்டமாக சிப் 28 --90 என்.எம்., இந்தாண்டிலேயே அறிமுகப்படுத்தப்படும்.
ஏ.ஐ., காரணமாக மிகப்பெரிய மாற்றத்தை அனுபவித்து வருகிறோம். இது நல்லது. இணைய சேவை உலகிற்கு என்ன அளித்ததோ, அதை போன்றதொரு மாற்றத்தை ஏ.ஐ., கொண்டு வந்துள்ளது. நாம் தொழில் மற்றும் துறைவாரியாக மாற்றத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும். ஏ.ஐ., சமூகத்திலும், தொழில்துறையிலும் மிகப்பெரிய முன்னேற்றத்தை கொண்டு வர உள்ளது.
இந்திய கலாசாரம், மொழிகள் மற்றும் சமூக வழக்கங்களுக்கு ஏற்ற வகையில், ஏ.ஐ., மாடல்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும். அதுபோன்ற முதல் மாடலை சர்வம் உருவாக்கி வருகிறது.
இவ்வாறு தெரிவித்தார்.