Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ இந்திய அளவில் வருமான சர்வே

இந்திய அளவில் வருமான சர்வே

இந்திய அளவில் வருமான சர்வே

இந்திய அளவில் வருமான சர்வே

ADDED : ஜூன் 29, 2025 07:25 PM


Google News
Latest Tamil News
நாடு தழுவிய அளவில் குடும்பங்களின் வீட்டு வருமான கணக்கெடுப்பை நடத்த திட்டமிடப்பட்டு, இதற்கான தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவை மத்திய மற்றும் புள்ளியியல் திட்ட அமலாக்க அமைச்சகம் அமைத்துள்ளது.

இந்திய குடும்பங்கள் மத்தியில் வருமானம் மற்றும் வளம் எப்படி அமைந்திருக்கிறது என்பதை அறியும் நோக்கில், இந்த கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் இந்த கணக்கெடுப்பை மேற்கொள்ளும்.

இந்திய இல்லங்களின் வருமான பரப்பை அறிந்து கொள்வதற்கான முதல் முழு அளவிலான கணக்கெடுப்பாக இது அமையும் என கருதப்படுகிறது. 1950 முதல் தேசிய மாதிரி கணக்கெடுப்பு நடைபெற்றாலும், வருமானம் தொடர்பான விரிவான சர்வே மேற்கொள்ளப்பட்டதில்லை. இல்லங்களில் தொழில்நுட்பங்களின் பயன்பாடும் கவனத்தில் கொள்ளப்படும்.

இதற்கு முன், 1955 மற்றும் 1984 ஆகிய ஆண்டுகளில் இல்ல வருமானம் தொடர்பான முன்னோட்ட சர்வேக்கள் நடத்தப்பட்டாலும், அவை நாடு முழுதும் விரிவாக்கப்படவில்லை.

இதற்காக நியமிக்கப்பட்டு உள்ள வல்லுநர்கள் குழு, கணக்கெடுப்பிற்கான வரையறை, மாதிரி அமைப்பு, மதிப்பீடு முறை உள்ளிட்ட அம்சங்களை பரிந்துரைப்பதுடன், கணக்கெடுப்பு முடிவுகளை இறுதி செய்து வெளியிடுவதிலும் வழிகாட்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us