Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/சம்பாதிக்க துவங்கும் போது பின்பற்ற வேண்டிய முக்கிய விதிகள் 

சம்பாதிக்க துவங்கும் போது பின்பற்ற வேண்டிய முக்கிய விதிகள் 

சம்பாதிக்க துவங்கும் போது பின்பற்ற வேண்டிய முக்கிய விதிகள் 

சம்பாதிக்க துவங்கும் போது பின்பற்ற வேண்டிய முக்கிய விதிகள் 

ADDED : ஜூன் 15, 2025 08:50 PM


Google News
Latest Tamil News
நிதி உலகில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களும், ஆலோசனைகளும்

எண்ணற்றவை இருந்தாலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் பின்பற்ற வேண்டிய எளிய விதிகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. அந்த வகையில், பணியில் சேர்ந்து சம்பாதிக்கத் துவங்கும் போது இளம் வயதினர் பின்பற்ற வேண்டிய முக்கிய விதிகளும் இருக்கின்றன.

சுயமாக சம்பாதிப்பது பொருளாதார சுதந்திரத்தை அளித்தாலும், நிதி அடிப்படைகளில் கவனமாக இல்லாவிட்டால், வீண் செலவு, தேவையில்லாத கடன் போன்றவற்றில் சிக்கிக் கொள்ளலாம். மாறாக, எதிர்கால நிதி பாதுகாப்பிற்காக பின்பற்ற வேண்டிய வழிகளை பார்க்கலாம்.

முதன்மை கணக்கு:


வேலையில் சேர்ந்து சம்பாதிக்கத் துவங்கியதும் உங்களுக்கு என பிரதான வங்கி கணக்கு ஒன்று இருப்பது அவசியம். ஊதியத்திற்கான வங்கி கணக்காக இருப்பதோடு, முக்கிய நிதி அடையாளமாகவும் விளங்கும். விசா செயல்முறை, கடன் விண்ணப்பம் என பலவற்றுக்கான நிதி வாழ்க்கை ஆவணமாக இது அமையும்.

செலவு விகிதம்:


செலவு செய்வதற்கு முன், சேமிப்பு முக்கியம் என்று சொல்லப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். இதை செயலில் காட்டுங்கள். எந்த செலவை மேற்கொள்வதாக இருந்தாலும், அதை உங்கள் வருமானத்தின் ஒருவிகிதமாக பார்க்க பழகுங்கள். அத்தியாவசிய செலவுகளை

தீர்மானிக்க இந்த முறை உதவும்.

கடன் தாமதம்:


சுயமாக சம்பாதிப்பது மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கும். ஆனால், விருப்பம் போல செலவு செய்வதற்கு முன், பொறுப்பை உணர்வது நல்லது. எனவே, இயன்ற வரை கடன் பெறுவதை தள்ளிப் போடுங்கள். வங்கி கணக்கில் கணிசமாக தொகை சேரும் வரை கிரெடிட் கார்டுவசதியை நாட வேண்டாம்.

நிதி ஆவணங்கள்:


வரி திட்டமிடலில் கவனம் செலுத்துங்கள். வருமானம், சேமிப்பு, முதலீடு தொடர்பான நிதி ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும். ஆவணங்களை கைவசம்வைத்திருப்பது, வருமான வரி தாக்கல் உள்ளிட்டபல நிதி செயல்பாடுகளுக்கு உதவும்; நிதி ஒழுக்கத்தையும்

உண்டாக்கும்.

சேமிப்பு பழக்கம்:


சேமிப்பை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என நினைப்பது தவறு. இளம் வயதில் சேமிக்கத் துவங்குவது நீண்ட கால நோக்கில் மிகப்பெரிய அனுகூலமாகும். எனவே, சேமிப்பிற்கு ஒதுக்கிய பிறகே மற்ற செலவுகளை மேற்கொள்ள வேண்டும். பி.எப்., போன்ற திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளவும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us