'செப்., வரை 6 மாதங்களில் பணியமர்த்தல் அதிகரிக்கும்'
'செப்., வரை 6 மாதங்களில் பணியமர்த்தல் அதிகரிக்கும்'
'செப்., வரை 6 மாதங்களில் பணியமர்த்தல் அதிகரிக்கும்'
ADDED : ஜூன் 28, 2025 11:42 PM

புதுடில்லி:நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து வரும் நிலையில், வரும் செப்டம்பருடன் முடியும் அரையாண்டில், வேலை சந்தையில் பணியமர்த்தல் நடவடிக்கைகள் சீராக இருக்கும் என, மத்திய அரசு கணித்துள்ளது.
மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொருளாதார விவகாரங்களுக்கான துறை தயாரித்து உள்ள மாதாந்திர பொருளாதார அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டு காலத்தில், நிகர வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் 2.80 சதவீதமாக இருக்கும். 47 சதவீத நிறுவனங்கள், பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளதாக, டீம்லீஸ் நிறுவனத்தின் கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.
எண்ணிக்கை அடிப்படையில் இன்றி, பணியாளர்களின் திறன் , தக்க வைத்து கொள்ளுதல், ஏ.ஐ., தொழில்நுட்பம் ஆகிய திறமை அடிப்படையில் அதிகளவில் பணியமர்த்தல் விரிவாக்கம் இருக்கும். இதில், மின்சார வாகனம், மின்சார வாகன உள்கட்டமைப்பு, வாகன தயாரிப்பு, மின்னணு வர்த்தகம், தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்கள் அதிக பங்களிப்பை வழங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.